பக்கம் எண் :

களவியல் சூ. 11 77

நிகழ்த்திப் பிரிதல் இயற்கைப் புணர்ச்சியொடு தொடர்புடைய தாய் உடன் நிகழ்வதென்பது “சொல்லிய நுகர்ச்சி வல்லேபெற்றுழித், தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ பேராச்சிறப்பின் இருநான்கு கிளவியும்” என அடுத்துவரும் நூற்பாவால் இனிது விளங்கும். எனவே இந்நூற்பாவுக்கு இளம்பூரணர் கூறும் கருத்தும் விளக்கமுமே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையவாதல் நன்கு தெளியப்படும்.

சிவ.

இச்சூத்திரம் இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னர் நிகழும் தலைவன் திறன் கூறுவதாக இளம்பூரணரும், இயற்கைப் புணர்ச்சிப் பின்னர்ப் பிரிவு நிகழுமாதலின் அதற்கு அஞ்சும் தலைவியைத் தன் கூற்று மூலம் தெளிவித்தல் தலைவன் கடமையாதலின் பிரிதல் நிமித்தம் கூறுவது என்று நச்சினார்க்கினியரும் கூறினர்.

முன்னைய ‘வேட்கை யொருதலை’ என்னும் சூத்திரம் இருவர் உணர்வுகளும் கூறுவதாய் இறுதி உணர்வு சாக்காடு எனக் கூறினமையின் அந்நிலையிலேயே மெய்யுறு புணர்ச்சி நிகழுமாயின் இச்சூத்திரத்துக் கூறிய முன்னிலையாக்கல் முதலியன இயற்கைப் புணர்ச்சிப் பின்னர் நிகழும் பிரிவு நிமித்தமாகத் தலைவன் கூறியன என நச்சினார்க்கினியர் கொள்கையையே உடன்படலாம். சாக்காட்டுணர்வின் முடிவில் மெய்யுறு புணர்ச்சி நிகழாமல் நீட்டிக்குமாயின் அப்போது இளம்பூரணர் கருத்துப்படி முன்னிலையாக்கல் முதலியன இயற்கைப் புணர்ச்சியின் நிமித்தங்களாகவே கொள்ளலாம்.

எனவே இச்சூத்திரம், இயற்கைப் புணர்ச்சியின் முன்னர் நிகழும் தலைவன் கூற்றாகவும், பின்னர்ப் பிரிதல் நிமித்தமாகத் தலைவன் கூறும் கூற்றாகவும் இருவகைக்கும் ஏற்கும் உரையிரண்டுக்கும் பொதுவாக அமைந்தது என்னலாம்.

களவில் தலைவன் கூற்று

99. மெய் தொட்டுப் பயிறல் பொய்பா ராட்டல்
  
 இடம் பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்
நீடுநினைந்து இரங்கல் கூடுதல் உறுதல்
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்
தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇப்