பக்கம் எண் :

76தொல்காப்பியம்-உரைவளம்

பண்பினைத் தான் அறிந்த தெளிவினைத் தன் மனத்தகத்தே தெரிந்து வெளிப்படுத்தலும் ஆகிய இவ்வுரையாடல்கள் தலைவன்பால் நிகழும் என்பர் உளநூற் புலவர், எ-று.

நகை நனியுறா அந்நிலைமையாவது, நகை மிக்குத் தோன்றாது சிறிதே அரும்பித் தோன்றிய முறுவற் குறிப்பாகிய அந்நிலைமை.

இளம்பூரணர் கருத்தினை மறுத்தற்கு நச்சினார்க்கினியர் எடுத்துரைக்கும் காரணங்கள் பொருத்தமற்றன. வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாக கூறப்பட்டவை களவொழுக்கத்துக்குச் ‘சிறப்புடை மரபினவை’ எனத் தொல்காப்பியனார் தெளிவாகக் குறித்துள்ளார். அவத்தை என்பன நல்லூழின் ஆணையால் ஓரிடத்து எதிர்ப்பட்ட ஒத்த அன்பினராகிய ஒருவன் ஒருத்தி என்னும் இருவர்க்கும் பொதுப்பட நிகழும் உணர்வு நிலைகளாம். புணர்ச்சிக்குக் காரணமாய் நிகழும் அவ்வுணர்வு நிலைகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் முன்னர்க் கூறுதலே முறை. இங்குச் சொல்லப்பட்ட உணர்வு நிலைகளின் வெளிப்பாடே பின்னர் மெய்ப்பாட்டியலில் விரித்துரைக்கப்படும் அகன்ஐந்திணை பற்றிய மெய்ப்பாடுகளாகும். வேட்கை முதல் சாக்காடீறாகச் சொல்லப்பட்ட இவ்வுணர்வுநிலைகள் களவொழுக்கத்திற்குச் சிறந்தன என இங்குக் குறித்ததல்லது இவற்றுட் சாக்காடு என்னும் அவத்தை (நிலை) எய்திய பின்னரே மெய்யுறு புணர்ச்சி நடக்கும் என்பது ‘வேட்கையொரு தலையுள்ளுதல்’ என வரும் தொல்காப்பிய நூற்பாவிலோ அதற்கு இளம்பூரணர் வரைந்துள்ள உரையிலோ யாண்டும் கூறப்படவில்லை. இயற்கைப் புணர்ச்சியில் எதிர்ப்பட்ட காதலர் இருவரும் தம் கண்ணினான் வரும் குறிப்பளவில் நின்று இன்முகமும் இன்சொல்லும் இன்றிப் பசுப்போல ஊமை நிலையில் கூடினார் என்றல் ‘மக்கள் நுதலிய அகன் ஐந்திணை’ யொழுகலாற்றுக்கு ஏற்புடையதன்றாம். எனவே இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவியை எதிர்ப்பட்ட தலைமகன் தலைவியை முன்னிலையாக்கல் சொல்வழிப்படுத்தல் முதலாகச் சில சொற்களைப் படிகால் முறைமையான் நிகழ்த்தித் தலைவியைக் கூடினான் என்றல் அவனது தலைமைக்கு எற்புடையதேயாகும். இங்ஙனம் இயற்கைப் புணர்ச்சிக்கண் உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்து மெய்யறுபுணர்ச்சி நிகழ்வதற்குமுன் தலைவியின்பால் நிகழ்வதற்குரிய மெய்ப்பாடுகளையே புகுமுகம் புரிதல் முதல் இருகையும் எடுத்தல் ஈறாக மெய்ப்பாட்டியலில் ஆசிரியர் விரித்துரைக்கின்றார். தலைவன் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையும்