and his expression of regard for his lady-love for her greatness in enduring her suffering: ‘Tholi’ having asked him to leave the place, and his expressions of his desire to ride over the horse made of the stem of Palmyra Leaves-these are the expressions which occur in the process of love making (on the part of the lover when meeting ‘tholi’). இளம். என்.............எனின் களவிற் கூட்டம் நான்கிடத்தும் தலைவன் கூற்று நிகழுமாறும், காதல் மிக்கு ஆற்றாமை கையிகப்பின் தலைவனாம் இயலும் கூறுதல் நுதலிற்று. (இ-ள்) : மெய்தொட்டுப் பயிறலாவது-பெருமையும் உரனுமுடைய தலைமகன் தெளிவகப்படுத்தியது காரணமாகக் காதல் வெள்ளம் புரண்டோடத் தலைவியின் மெய்யைத் தீண்டிப் பயிறல். “தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட வில்லுடை வீளையர் கல்லிடுபு எடுத்த நனந்தலைக் கானத்து இனந்தலைப் பிரிந்த புன் கண் மடமான் நேர்படத் தன் ஐயர் சிலைமாண் கடுவிசைக் கலை நிறத்தழுத்திக் குருதியொடு பறித்த செங்கோல்வாளி மாறு கொண்டன்ன உண்கண் நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே”1 (குறுந்-272) பொய் பாராட்டலாவது-தலைவியின் ஐம்பால் முதலிய கடை குழன்று சிதைவின்றேனும் அஃதுற்றதாக மருங்கு சென்று தொட்டான் ஓர் காரணம் பொய்யாகப் படைத்து உரைத்துப் பாராட்டல்,
1. பொருள்: காட்டிடத்துத் தன் இனத்தைப் பிரிந்து எதிர்ப்பட்ட மான்மீது அத்தலைவியின் அண்ணன்மார் எய்த அம்பைப் பறித்தபோது அதன் கடையில் சிவந்த குருதி தோன்றுவது போலச் சிவந்த கண்ணையுடைய அவளது தோளை இனிக் கூடப் பெறுவேனோ?-பாங்கனிடம் தலைவன் கூறியது. |