பக்கம் எண் :

பொருளதிகாரம்101

காலத்து) அவன் மறைந்த திக்குநோக்கித் தோழீ! இவன் ஒரு புருஷனே என்று வியந்து கூறினாள்.

(அகம். 48)

7. கட்டுதல் மாட்சிமைப்பட்ட கண்ணியையுடையனாய் வில்லையுடையனாய் வரும்; அங்ஙனம் வந்து என்னைப் பார்த்துத் தானுற்ற நோயை மிகவுங் குறிப்பாலே யானுணரக் காட்டுவதன்றிக் கூற்றாற் கூறானாய்ப் பலகாலும் மீண்டுபோம்; அது கண்டு அவனேயன்றி அவனிடத்து மிகவும் உறவில்லாத யானும் அவன் என்செய்கின்றானென்னும் நினைவு மிக்குத் துயில்பெறேனாய் வருத்தத்திலே விழுந்து அழுந்துவேன்.

(கலி. 37)

8. நமக்காயின் நின் வருத்தத்திற்கு யாமும் வருந்தினோ மென்று கூறுதல் பெண்டன்மையன்று.

(கலி. 37)

9. தாதை உண்ணுகின்ற பறவை (வண்டு) வருந்துதலுக்கு அஞ்சி மணியின் நாவை ஒலியாவண்ணங் கட்டிய மாட்சிமைப்பட்ட தொழிலமைந்த தேரையுடையோன்.

(அகம். 4)

10. தனது வேட்கை நிறைந்த உள்ளத்தின்கண் எமது வேட்கையும் வாய்ப்ப என்பது பேராசிரியர் கருத்து. (காவலரறியாமல்) தன்னை நச்சுதலையுடைய உள்ளத்தில் எம்முடை நசை (வேட்கை) வாய்ப்ப என்பது அகநானூற்றுக் குறிப்புரைகாரர் கருத்து.

11. என்றோளைத் தொழில்கொள்கின்ற அவன் நெய்தற் பூவைப் புறவிதழொடித்து மாலைகட்டிச் சூடவும் வல்லன். நெடிதாகிய மென்றோளிலே காமன் சிலையாகிய எழுது கரும்பை எழுதவும் வல்லன்; இளமுலைமேற் றொய்யிற்குழம்பாற் கொடி எழுதவும் வல்லன்; இவையொழிந்து நீங்கியிருந்து மனம் வேட்கையடக்கி யிருக்குமிடத்துத் தன்கையில் வில்லைத் தொழில்கொள்ள வல்ல காமனை ஒக்கும்; அதுவன்றி வேட்கை நிகழ்ந்து கூடுங் காலத்து ஆண்டு நிகழ்த்தும் நல்ல தொழில்கள் பலவற்றையும் வல்லன்.

(கலி. 143)

12. பலவுங் கூடின உழுத்தம் பணியாரத்திலுங்காட்டில் துய்க்கப்பட்டிருக்கின்ற கூன் சாதியினுடைய பிறப்பு நின்னிற்றாழ்ந்ததோவென்றாள்.

(கலி. 94)