பக்கம் எண் :

பொருளதிகாரம்103

உவமையியற் சுருக்கம்

ரு பொருளை அறியாத ஒருவனுக்கு அதனை அறிவிக்குங்கால் அதனோடொத்த வேறொரு பொருளைக் காட்டி இதுபோலும் இது என்று கூறுவதே உவமையாம். ஆதலின், அவ்வுவமையும் பொருளைப் புலப்படுத்த வந்ததேயாம். பேராசிரியரும், உவமவியலிற்கு அதற்கு முதலிலுள்ள ஓத்தினோடு இயைபுகூறுங்கால், “மற்றிதுமேலெவ்வோத்தினோ டியைபுடைத்தோவெனின், மேற்பொருள்புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலோ டியைபுடைத்து; என்னை? உவமைமத்தானும் பொருள்புலப்பாடே கூறுகின்றானாகலின், எங்ஙனமெனின்? ஆபோலும் ஆமா என்றக்கால் ஆமா கண்டறியாதான் காட்டுட் சென்றவழி, அதனைக்கண்டுழி ஆபோலும் என்னும் உவமைபற்றி ஆமாவிதுவென்று அறியுமாகலான்” என்று கூறுதலானே உவமை பொருளைப் புலப்படுத்தற்பொருட்டே புலவர்களாலெடுத்தாளப் படுவதென்பது பெறப்படும். பொருளைப் புலப்படுத்தற்கேயன்றி, அப் பொருளைப் புனைந்துரைத்தல் காரணமாகவும் உவமை கூறப்படும். அங்ஙனமாதல், ‘கண் பிறழ்ந்ததோ கயல் பிறழ்ந்ததோ’ என்புழிக், கண்ணின் பிறழ்ச்சியை ஐயவுவமை வாய்பாட்டாற் புனைந்துரைத்தல் காரணமாகக் கயலின் பிறழ்ச்சி இங்கு எடுத்துக் காட்டப்பட்டதன்றிப், பொருளைத் தெரிக்கக் காட்டப்பட்ட தன்றாதலானுணரப்படும். அன்றிக் கண்ணின் பிறழ்ச்சி தெரியாதானுக்கு அப்பிறழ்ச்சியை உணர்த்துமாறு கயலின் பிறழ்ச்சியை எடுத்துக்காட்டி இதுபோலும் இது என்று காட்டின் அதுவும் பொருள் புலப்படுக்கவந்ததேயாம்.

ஒரு பொருளுக்கு ஒரு பொருளை உவமிக்குங்கால், தொழிலும், பயனும், வடிவும், நிறமும் என்னும் நான்கனுள் ஒன்றானே உவமிக்கப்படும். எங்ஙனமெனின்? “புலிபோலும் மறவன்” என்புழி மறவனுடைய பாய்தற்றொழிலிற்குப் புலியின் பாய்தற்றொழிலை எடுத்துக்காட்டி, புலிபாய்வதுபோலப் பாயும் மறவன் என உவமித்தமையின் இது வினையுவமையாம். “மாரியன்னகை” என்புழிக் கையின் கொடைப்பயனை யுணர்த்தற்கு மழையை எடுத்துக்காட்டி, மழைபோல மிகக்கொடுக்குங் கை