பக்கம் எண் :

112உவமவியல்

‘துடியிடை’ என்பது மெய்யுவமம்; அல்குலும் ஆகமும் அகன்றுகாட்ட 1அஃகித் தோன்றும் 2மருங்குலால் துடி அதனோடு ஒத்தது.

‘பொன்மேனி’ என்பது உருவுவமம்; பொன்னின்கண்ணும் மேனியின்கண்ணுங் கிடந்த நிறமே ஒத்தன; பிற ஒத்திலவென்பது. இந்நான்கும்பற்றி உவமந் தோன்றுமென்பது கருத்து. ‘உவமத் தோற்றம்’ என்பது மூன்றாவதன் தொகை, உவமத்தாற் பொருள் தோன்றும் தோற்றமென்றவாறு.

மற்று ‘அடைசினை முதல்’ (தொ. சொ. 26) என்றாற் போல, அடையெனவே 3இந்நாற்பகுதியும் அடங்கக் கூறிப் ‘பண்புத்தொகை’ என்புழி வண்ணம் வடிவு முதலாயின அடக்கியவாறுபோலப் 4பண்பென்று அடக்குதல் செய்யாது ஈண்டு நான்கெனப் பகுத்ததென்னையெனின்,--இது பொருளாராய்ச்சியாகலான்5கட்புலனாம் பண்பும் உற்றுணரும் பண்பும் வேறாக நோக்கி வடிவினையும் உருவினையும் வேறுபடுத்தான்; என்னை? வடிவுபற்றிய பண்பு இரவின்கண் 6உற்றுணரப்படும்; வண்ணமாயின் அவ்வாறு உற்றுணரப்படாதென்பது. 7அல்லாக்காற் பகற்குறிக்கட் கூறப்படும் வண்ணம் முதலாயினவும் இரவுக்


1. அஃகி--சுருங்கி.

2. மருங்குல்--இடை.

3. இந்நாற்பகுதி--வினை பயன் மெய் உரு.

4. வண்ணம் வடிவு முதலிய நான்கையும் அடையெனக் கொண்டு அவ்வடைதன்னையும் பண்பென்று அடக்கிக் கூறலாமே? இங்ஙனம் நான்கெனப் பகுத்ததென்னை? என்று வினாவிடை கூறுகின்றார்.

5. கட்புலனாம் பண்பு--நிறம் (உரு). உற்றுணரும் பண்பு--வடிவு.

6. உற்றுணரப்படும் என்பது (உருவாக) உற்றுணரப்படும் என்று s. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிற்காணப்படுகின்றது. உரு என்பது நிறத்திற்கே முன்பின் வாக்கியங்களிற் காணப்படுதலின் வடிவையும் உரு என்று ஈண்டுக் கூறல் மயக்கமாமாதலின் ‘உருவாக’ என்பது ஈண்டு வேண்டியதின்று. உற்றுணர்தல்--பரிசித்தறிதல். பண்பினை என்பது பண்பு என்றும் இரவின்கண் என்பது இரவின்கண்ணும் என்றுந் திருத்தப்பட்டன; அவ்வாறிருத்தலே பொருத்தமாதலின்.

7. அல்லாக்கால்--உற்றுணரப்படுமாயின்.