“மாரியன்ன வண்கை” (புறம். 133) என்பதூஉம் பண்பாயின், அதன் நிறத்து மேற்கொண்டு வண்கையுங் கரிதெனல் வேண்டுமாகலின் அது பண்பென அடங்காது. “அணைத்தோள்” (கலி. 87) என்பதும் அது. “உருவுகிள ரோவினைப் பொலிந்த பாவை யியல்கற் றன்ன வொதுக்கினள்” (அகம். 141) என்றக்கால், வடிவுபற்றி உவமங்கொள்ளவே, உயிரில்லாதாள் போல அச்சமின்றி, இரவிடை வந்தாளென்னும் பொருள் தோன்றும். வடிவு பண்பெனப்படாது; 1பண்பு இழிபாகலின். “மாரிப் பீரத் தலர்சில கொண்டே” (குறுந். 98) காட்டி, 2 ”இன்ன ளாயின ணன்னுதல்” (குறுந். 98) என்றவழி, குறித்த பருவங் கழிந்ததென்னும் பொருண்மை விளங்கிற்று. இது உருவுவமம். 3இவ்வாறு பொருளுணர்த்துதற் பகுதிநோக்கி ‘உவமப் பகுதி’ என்றானென்பது; என்றார்க்கு, இந்நான்கு பகுதியேயன்றி அளவுஞ் சுவையுந் தண்மையும் வெம்மையும் நன்மையுந் உவமையாதலின், புலிபோலப் பிழையாமற் கோடற்குப் பார்வலொதுங்கினானன்றிப் பிறர்க்கஞ்சி ஒதுங்கினானல்லன்; என்னும் பொருள் தோற்றமாயிற்று என்றபடி. 1. பண்பு இழிபாகலின் என்பது பண்பியாகலின் என்றிருத்தல் வேண்டும். பண்பையுடையது பண்பி. என்னை? நிறத்தையுடையது வடிவாகலின், முன்னும் ‘பிழம்பினாற் றோன்றுவது நிறம்’ என்றும், ‘மெய்யெனப்படுவது பொருளாதலின்’ என்றுங் கூறுதலானும், பின்னும் ‘ஒடற்றொழில் வடிவிற்கல்ல தின்மையின் அவ்வடிவிற்கேற்றது பண்பாயின், பண்பு--நிறப்பண்பு ஓடீற்றெனலாகாமையின் (உவம. 17) என்று கூறுவதனாலும் அறியப்படும். வடிவு பண்புக்காதாரமாதல்பற்றிப் பண்பி என்றார். 2. இன்னள்--இத்தன்மையள். என்றது, இப்பூவினைப் போலப் பசப்புற்றாள் என்றபடி. பசந்தமைக்குக் காரணம் பருவங் கழிதல். 3. உருவுவமம் என்பது முன் வாக்கியத்தோடு சேரல் வேண்டும் இன்னள் என்பது உருவுவமங் குறித்து நின்றதென்றபடி. |