தீமையுஞ் சிறுமையும் பெருமையும் முதலாயினபற்றியும் உவமப்பகுதி கூறாரோவெனின்,--அவையெல்லாம் இந்நான்கனுள் அடங்குமென்றற்கும் அந்நான்கும் இன்ன பொருட்பகுதி உடைய வென்றற்குமன்றே அவற்றை ‘வகைபெற வந்த’ என்பானாயிற்றென்பது. “பறைக்குர லெழிலி” (அகம். 23) என்றக்காற் பறையும் எழிலியும் 1ஒத்தல் வினைபற்றி உவமை கொள்வான் ஒன்றற்குக் குரல்கூறி ஒன்றனை வாளாது கூறினானாயினும் வினையுவமத்தின் வகையெனப்படும். “கடைக்கண்ணாற் கொல்வான் போனோக்கி” (கலி. 51) என்பதூஉம் அதன்வகை. ‘வந்த’ என்றதனான் இல்லாத வினை வருவித்துஞ் சொல்லப்படும்; அவை, “விசும்புரி வதுபோல்” (அகம். 24) எனவும், “மணிவாழ் பாவை நடைகற் றன்ன” (நற். 184) எனவும், “வான்றோய் வன்ன குடிமையும்” (பாயிரம்) எனவும் வரும். இவை, 2உவமையும் பொருளுமாகிய வினைபற்றி வந்திலவாகலின் அதன் வகையெனப்பட்டன. ‘அன்ன’ 3‘ஆங்க’ என்பன இடைச்சொல்லாகலின் வினைப்பின்னும் வந்தன. ‘நடை கற்றன்ன’ என்புழிக் கற்று என்னும் வினையெச்சந் 4தன்
1. ஒத்தல்--ஒலித்தல் என்றிருத்தல் வேண்டும். 2. உவமையும் பொருளுமாகிய வினைபற்றி வந்தில என்றது உவமையாயும் உவமேயமாயும் நிற்குந் தொழில்பற்றி வந்தில என்பது கருத்து. 3. ஆங்க என்பதற்கு உதாரணம் இறந்ததுபோலும். செய்யுள் வழக்கில் ஆங்கு என்றே காணப்படுகின்றது; ஆதலின் இது ஆராயத்தக்கது. 4. தன் எச்சவினை இகந்ததாயினும் என்றது தனக்குரிய முடிக்குஞ் சொல்லாகிய வினையை நீங்கியதாயினும் என்றபடி. கற்று என்பது அன்ன என்னும் குறிப்பாகிய பிற கருத்தாவின் வினையொடு முடிதலின் அவ்வாறு கூறினார். அன்றி, இடைச் சொல்லாதல் நோக்கிக் கூறினார் எனினுமாம். |