பக்கம் எண் :

116உவமவியல்

னெச்சவினை இகந்ததாயினும் அஃது உவமப் பகுதியாகலான் அங்ஙனம் வருதலும் ‘வகை’ என்றதனானே கொள்ளப்படும்.

“கொன்றன்ன வின்னா செயினும்”

(குறள். 11--9)

என்பதும் அது.

“இணரெரி 1தோய்வன்ன வின்னா செயினும்”

(குற. 31--8)

என்பது, வினைப்பெயர்பற்றி உவமஞ் சென்றது.

2 “பொன்மரம் போலக் கொடுக்கும்”

என்பது, பயவுவமத்தின் பகுதியாய் அடங்கும்; என்னை? 3மழைத்தொழிலாகிய பெயலாற் பயந்த விளையுளுடன் இடையிட்டுப் போய் உவமங்கொள்ளாது கொடைப்பொருள் இரண்டும் ஒத்தமையின் மெய்யுவமம் எனப்படாது கொள்வார்க்குப் பயம் ஒத்தலாற் பயவுவமத்தின் வகையாயிற்று. ‘நிலம்போலுங் கொடை’ என்பதும் அது.

“தெம்முனை யிடத்திற் சேயகொல்”

என்னும் எல்லைப் பொருண்மை மெய்யுவமத்திற்கு வகையெனப்படும்; அஃது 4அளவாகலினென்பது.5இடைக்கிடந்த நிலம் இரண்டினையும் வடிவுபற்றி உவமஞ்செய்தானென்பது. மற்றுச்


1. தோய்வு--தோய்தல். தொழிற்பெயர். வினைப்பெயர்--தொழிற்பெயர்.

2. பொன்மரம்--கற்பகமரம். அது பின் 14-ம் சூத்திரத்துட் காட்டிய “புத்தேளுலகிற் பொன்மரம் புல்ல” என்பதனால் அறியப்படுகின்றது.

3. ‘மழைத்தொழிலாகிய.......கொள்ளாது’ என்பது ஈண்டியைபில்லாத வாக்கியம் மாறி எழுதப்பட்டதுபோலும். அன்றி பயனுவமையை வகையுளடக்கியதற்கு ஏதுக் கூறியதெனின் பயனுவமை கொள்ளுங்கால் இடையிட்டுத்தான் கொள்ளவேண்டும் என்பது ஒரு நியதியா? என்பது ஆராயத்தக்கது.

4. அன்னவாகலின் என்பது முன்னுள்ள பாடம். அது பொருத்தமில்லை.

5. இடைக்கிடந்த நிலம்--இடை கிடந்த நிலம் என்று பாடம் உள்ளது. அதுவே பொருத்தம். இடை--வெளி. இருபக்கத்துச் சேனைக்கும் நடுவே கிடந்த வெளி நிலம். இடத்திற் சேய--இடத்தினைப்போலத் தூரிய. இஃது அண்மைத் தூரம் “தெம்முனையிடத்திற் சேயகொல்” இ. வி. 639-ம் சூத்திர உரைப் பாடம்.