சேய்மை அண்மை குணமாம் பிறவெனின்,--அற்றன்று; ’துடியிடை’ என்றவழி அதன் இடை நுணுக்கமுங் குணனாகும், அவ்வாறு கொள்வார்க்கு என்பது; எனவே நிறப்பண்பு அல்லனவெல்லாம் மெய்யுவமத்தின் வகையெனப்படுவனவாயின. குணமாதலொப்புமையான் அவை நிறப் பண்பிற்கு இனமெனவும்படும். அவ்வாறு திரிபுடைமையின் அவற்றை விதந்தோதாது ‘வகை’ என்றதனாற் கொண்டானென்பது. “தளிர்சிவந் தாங்குச் சிவந்த மேனி” என்பது, உருவுவமத்தின் வகையெனப்படும்; என்னை? உவமத்தாற் கொள்ளப்பட்ட பொருள் 1நிறமாயினும் அதனை வினை விரித்தாங்கு விரித்தமையின் அவ்வேறுபாடு நோக்கி வகையெனப்பட்டது. பிறவும் அவ்வாறே கொள்க. இப்பகுதியுடைமை நோக்கி ‘வகைபெற வந்த’ என்றானென்பது. (1) [வினை முதலிய நான்கும் கலந்தும் வருமென்று எய்திய திகந்துபடாமற் காத்தல்] 277. | விரவியும் வரூஉ மரபின வென்ப. |
இஃது, எய்தியது இகந்துபடாமற் காத்தது; நான்கென மேல் (279) தொகை கொடுத்தமையின் அவை வேறு வருதலெய்தியதனை அவ்வாறேயன்றி விரவியும் வரும் என்றமையின். இ--ள் : அந்நான்கும் ஒரு பொருளோடு ஒரு பொருள் உவமஞ் செய்யும்வழி ஒன்றேயன்றி இரண்டும் மூன்றும் விரவியும் வரும் அதன் மரபு என்றவாறு. “செவ்வா னன்ன மேனி” (அகம். கடவுள் வாழ்த்து) என வண்ணம் ஒன்றுமேபற்றி உவமஞ் சென்றது. “அவ்வா னிலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று” (அகம். கடவுள்.) என்றவழி, 2வண்ணத்தோடு வடிவுபற்றி உவமஞ் சென்றது.
1. நிறம்--செம்மை. அதனை--அச்செம்மை நிறத்தை. வினை விரித்தாங்கு விரித்தது என்றது சிவந்தாங்குச் சிவந்த என விரித்தமையை. 2. வண்ணம்--வெண்மை. வடிவு--வளைவு. |