பக்கம் எண் :

118உவமவியல்

“காயா மென்சினை தோய நீடிப்
 பஃ 1றுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்த
 ளணிமலர் நறுந்தா தூதுந் தும்பி
 கையாடு வட்டிற் றோன்று
 மையாடு சென்னிய மலைகிழ வோனே.”

(அகம். 108)

என்புழி, ஆடுதற்றொழில்பற்றியும் 2வடிவுபற்றியும் வண்ணம் பற்றியும் வந்தது. பிறவுமன்ன.

‘மரபின’ என்றதனான் அவை அவ்வாறு விராய்வருதலும் மரபே; 3வேறுவேறு வருதலே மரபெனப்படாதெனக் கொள்க..

(2)

[பொருளினும் உவமை உயர்ந்துவரல்
வேண்டுமெனல்]

278.உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை

இஃது, எய்தாதது எய்துவித்தது.

இ--ள் : உவமையெனப்பட்டது உயர்ந்த பொருளாகல் வேண்டும் என்றவாறு.

எனவே, உவமிக்கப்படும் பொருள் 4இழிந்துவரல்வேண்டுமென்பது,

“அரிமா வன்ன 5வணங்குடைத் துப்பின்”

(பட்டின. 298)

எனவும்,


1. துடுப்புப்போலும் பூவரும்பு. பூமடலுமாம். துடுப்பு--நெய்த்துடுப்பு. (அஃதாவது சுருக்கு சுருவம்) சூடாமணி நிகண்டு பார்க்க.

2. வடிவு--வட்டம். வண்ணம் (-நிறம்), நீலவட்டாயின் நீலம். செம்மைவட்டாயின், வண்டு காந்தட்டாதின் அளைதல்பற்றி யுவமையாம். காந்தள் கைக்கு வடிவும் நிறமும்பற்றி வந்த உவமையாகும்.

3. வேறுவேறு வருதல்மாத்திரம் மரபென்று கொள்ளப்படாது. விரவி வருதலும் மரபாகும் என்பது கருத்து.

4. இழிந்துவரல்--உவமையினும் இழிந்துவரல்.

5. அணங்கு--வருத்தம். இது வலிபற்றியது. வலியால் வருத்துதல்பற்றி வினையுவமையாகும்.