பக்கம் எண் :

120உவமவியல்

என்பது, ஐயுற்று 1முன்னத்தான் உவமஞ்செய்தது. 2தாமரையன்று முகமேயெனத் துணிந்தவழியும், 3மழையன்று வண்டிருத்தலிற் குழலேயெனப் பொருட்குக் காரணங் கொடுத்த வழியும் 4மதியங்கொல்லோ மறுவில்லையென்று உவமைக் குறைபாடு கூறுதலும்,

“நுதலு முகனுந் தோளுங் கண்ணு
 மியலுஞ் சொல்லு நோக்குபு நினைஇ
 யை 5தேய்ந் தன்று பிறையு மன்று
 மைதீர்ந் தன்று மதியு மன்று
 வேயமன் றன்று மலையு மன்று
 பூவமன் றன்று சுனையு மன்று
 மெல்ல வியலு மயிலு மன்று
 சொல்லத் தளரும் கிளியு மன்று.”

(கலி. 55)

என்பனவுமெல்லாம் அவை. இவற்றுண் 6மலையுஞ் சுனையும் உவமையின்மையின் அவற்றைப் பிறையோடும் மதியோடும் உடன் வைத்து உவமைபோலக் கூறி எதிர்மறுத்தது என்னையெனின்,--அவையாமாறு ‘முதலுஞ் சினையும்’  என்புழிச் சொல்லுதும்.

“என்ற வியப்ப வென்றவை யெனாஅ”

(தொ. உவம. 11)

என மேல்வருஞ் சூத்திரத்துள் என்றவென்பதோர் உவமவுருபு கூறினமையின் ‘வாயென்ற பவளம்’ எனவும், ‘வாய் பவளமாக’ எனவும், ‘வாய் பவளம்’ எனவும் வருவனவும் அக்குறிப்புவமையின் பகுதியெனவே படும். இவற்றை வேறுவேறு பெயர் கொடுத்து விரித்துக் கூறாது முன்னத்தி னுணர்வனவே7இவை யெல்லாமென்னுந் துணையே இலேசினாற் கூறி ஒழிந்ததென்னை யெனின்,--இவற்றாற் செய்யுள் செய்வார் செய்யும் 8பொருட்


1. முன்னம்--குறிப்பு. ஐயவாய்பாட்டாற் கூறினும் அவை குறிப்பால் உவமையாதல் பெறப்படும் என்றபடி.

2. இதனைத் தண்டியாசிரியர் உண்மை உவமை என்பர்.

3. தேற்றவுவமை என்பர்.

4. விலக்குவமையுளடங்கும்.

5. தேய்ந்தன்று--தேய்ந்தது. ஏனையவுமன்ன.

6. மலை--மலையிடம். சுனை--சுனையிடம். வருஞ் சூத்திரத்து உரை நோக்குக.

7. இவையெல்லாம்--இவ்வுதாரணங்களெல்லாம்.

8. பொருட்படை--பொருளடுக்கு. பொருட்டிரள் எனினுமாம்.