பக்கம் எண் :

176உவமவியல்

துப்பி னன்ன செங்கோட் 1டியவி
னெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும்.”

(அகம். 9)

எனவும்,

“நீளரை யிலவத் தலங்குசினை பயந்த
பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
வரிப்புற வணிலொடு 2கருப்பை யாடா
தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தோட்
டீத்திலை வேய்ந்த 3எய்ப்புறக் குரம்பை.”

(பெரும். 83)

என்றாற்போல்வனவும் அது

“கொல்வினைப் பொலிந்த.”

என்பதனுள் இந்நிலத்தின் மக்கள் அம்பினை உவமையாக்கி ஆண்டையவாகிய இருப்பையின் பூங்கொத்தை உவமிக்கப்படும் பொருளாக்கியும், உவம நிலத்திற்கேற்ற வெண்ணெய்த் திரளொடு, கழன்ற பூவினை உவமஞ்செய்தும், அந்நிலத்தியல்பு கூறினமையின் அது பயனிலை புரிந்த வழக்கெனப்பட்டது. பிறவும் அன்ன.

உவமத்தன்மையுமென்ற உம்மையான் உவமத்தன்மையேயன்றி வாளாது தன்மை கூறுதலும், அந்நிலத்திற்கே பயனிலை யெனப்படுவனவுங் கொள்க. அவை:--

“மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
4யீன்பிண வொழியப் போகி நோன்கா
ழிரும்பு தலையாத்த திருந்து5கணை விழுக்கோ
லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
யிருநிலக் 6கரம்பைப் படுநீ றாடி
நுண்புல் லடக்கிய வெண்பல் லெயிற்றியர்
7பார்வை யாத்த பறைதாழ் விளவி
னீழன் முன்றி னிலவுரற் பெய்து.”

(பெரும். 89--97)

என்றவழி உவமஞ்செய்யாது அந்நிலத்தியல்பு கூறப்பட்டதாயினும் உவமத்தாற் 8பொருட்பெற்றி தோன்றச்செய்தார்போல


1. இயவு--வழி.

2. கருப்பை--காரெலி.

3. எய்--முட்பன்றி.

4. ஈன்பிணவு--ஈன்றபெண். ஈன்பிணா எனவும் பாடம்.

5. கணை--திரட்சி.

6. கரம்பை--பாழ்நிலம்.

7. பார்வை--பார்வை மிருகம்.

8. பொருள்--உவமேயம்.