யுஞ் சிறப்பக் கூறல்வேண்டுமென்றான்; 1அவ்வாறன்றி உவமமுங் கொள்ளப்படுமென்றமையின். இ--ள் : உவமத்தன்மையும் உரித்தென மொழிப--விகார வகையாற் பெருமையுஞ் சிறுமையும் ஒரு பொருட்குக் கூறாது 2பட்டாங்கு உவமங் கூறுதலும் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர், பயனிலை புரிந்த வழக்கத்தான--அதனானும் ஒரு பயன் தோன்றச் சொல்லுத னெறிப்பாட்டின்கண் என்றவாறு. அது, “பாரி பாரி யென்று பலவேத்தி யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர்.” (புறம். 107) என்னும் பாட்டினுள் உலகளித்தற்கு மாரியும் உண்டென உவமித்துச் சிறப்பித்துக் கூறுவான், மாரியைச் சிறப்பித்துப் பாட்டுடைத் தலைவனாகிய பாரியை உயர்த்துக் கூறாதான்போல இயல்பினான் உவமை கூறினானாம்; இது மாரிக்கும் பாரிக்கும் ஓரிழிவில்லையென்னுந் தன்மைபடக் கூறவே அவனுயர்வு கூறுதலிற் 3பயனிலைபுரிந்த வழக்கெனப்படுமென்பது. “கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் 4புழுகின் வில்லோர் 5தூணி வீங்கப் பெய்த 6வப்புநுனை யேய்ப்ப வரும்பிய விருப்பைச் 7செப்பட ரன்ன செங்குழை யகந்தோ 8றிழுதி னன்ன தீம்புழற் 9றுய்வா 10யுழுதுகாண் டுளைய வாகி யார்கழல் பாலி வானிற் காலொடு பாறித்
1. அவ்வாறன்றி உவமமும் என்பது அவ்வாறன்றியும் உவமம் என்றிருப்பது நலம். 2. பட்டாங்கு--உண்மை. உண்மை. இயல்பு தன்மை என்பன ஒருபொருளன. இளம்பூரணர் தன்மையென்பதற்கு உவமையது தன்மை என்பர். தன்மை--குணம். 3. பயன்--பிரயோசனம். 4. புழுகு--மொட்டு. எஃகின் எனவும் பாடம். 5. தூணி--அம்பறாத்தூணி. 6. தூணி வீங்கப்பெய்த அப்புநுனை, இருப்பை அரும்புக்குவமை. 7. செப்படர்--செப்புத் தகடு. 8. இழுது--வெண்ணெய். 9. துய்வாய்--என்றது. பூவை. உவம ஆகுபெயர். 10. உழுது காண்டல்--தாள்நீக்கிக் காண்டல். |