இ--ள் : ஒரீஇக் கூறலும்--ஒக்குமெனக் கூறாது ஒவ்வாதெனக் கூறுதலும், உம்மை இறந்தது தழீஇயிற்று; மரீஇய பண்பு--அதுவும் உவமையாதற்கு அடிப்படவந்த வழக்கு என்றவாறு. உதாரணம்: “யாங்ஙன மொத்தியோ விலங்குசெலன் மண்டிலம்.” (புறம். 8) எனவும், “மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற் காதலை வாழி மதி.” (குறள். 1118) எனவும் வரும். 1“நின்னோ ரனையை நீ.” என்பதும் அது. இவற்றுள் யாங்ஙனம் ஒத்தியோவென்பது ஒவ்வாயென்னும்பொருட்டு. காதலை வாழிமதி யென்றவழியும், யான் காதலியாமையான் மதியமே! அவள் வாண்முக மொவ்வாயென்றலின் ஒரீஇக் கூறிற்று. 2இதுவும்3மரீஇய பண்பாகலானும் உள்ளுறையுவமம்போலக் குறிப்பினான் உவமங்கோட லொப்புமையானும் ஈண்டு வைத்தானென்பது. பண்பென்றதனான் அதுவும் இலக்கணத்தோடொக்கும் என்றவாறு. இவற்றையும் வேறுபடவந்த உவமமென்னாமோவெனின், உவமையும் அவ்வழி மாறுபட வருமாறு உவமத்துக் கூறினான், உவமையின்மை கூறுதலும் உவமையெனப்படுமென்றற்கு இது கூறினானென்பது. இவற்றுள்ளும் வேறுபடவந்த இலக்கணம் மேலைச்சூத்திரத்துள் அடங்கும். (33) [உவமை பெருமையுஞ் சிறுமையுந் தோன்றாமலுங் கூறப்படுமெனல்] 309. | உவமத் தன்மையு முரித்தென மொழிப பயனிலை புரிந்த வழக்கத் தான. |
இஃது எய்தாதது எய்துவித்தது; மேல் ஏனையுவமங் கூறங்கால், உவமிக்கப்படும் பொருட்குப் பெருமையுஞ் சிறுமை
1. நின்போல்வாரை யொப்பை நீயெனவே, நின்போல்வாரில்லையென்று ஒவ்வாமை கூறியதாயிற்று. 2. இதுவும் என்றது இச்சூத்திரத்தை. 3. மரீஇய பண்பு--மரபாகவந்த தன்மை. |