என்பதனுள் உவமையாகிய நிழல் பொருட்கெய்தியது 1உவம வினையன்றே, அதற்கு நெடுந்தோடும் பெருமையும் அடையாகக் கூறினான்; கூறவே, பனைநிழலோடொக்குங் குன்றஞ்சேர் சிறுநெறி முடிந்தவழிச் சென்றுபுகும் ஊர்க்குவமை நெடுந்தோடென்று கொள்ளவைத்தமையின் அதுவும் வேறுபடவந்த உவமையாயிற்று. (10) “மண்படுதோட் கிள்ளி மதவேழ மாற்றரசர் வெண்குடையைத் தேய்த்த வெகுளியால்--விண்படர்ந்து பாயுங்கொ லென்று பனிமதியம் போல்வதூஉந் தேயுந் தெளிவிசும்பி னின்று.” என்பதனுள், 2உவமானத்தினை உவமேயமாக்கி அதனையே விலக்கினார்; என்னை? வெண்குடையென்று யானை குத்துமென்று மதியினைக் குடையுடனொப்பிப்பான் மதியினைக் குடையாகவே கூறித், தேயுந் தெளிவிசும்பினின்று என்பதனாற் குடையோடு உவமை கூறியதை விலக்கினமையின் அதுவும் வேறுபடவந்த உவமைத் தோற்றமாயிற்று. (11) “அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு.” (குறள். 1) என்றவழி, இரண்டு பொருள் வேறுவேறு கூறியதன்றி, ‘அகர முதல எழுத்தெல்லாம் அதுபோல’ என்றானும் ‘ஆதிபகவன் முதற்று உலகம் அதுபோல’ என்றானும் ஒன்றாகத் துணியுமாற்றான் உவமையும் பொருளுங் கூறாமையின் அதுவும் வேறுபடவந்த உவமமாயிற்று. பிறவுமன்ன. இவை ஏனையுவமத்திற்கெல்லாம் பொதுவிலக்கணம். [ஒவ்வாதெனக் கூறி உவமையாக்கலும் உளவெனல்] 308. | ஓரீஇக் கூறலு மரீஇய பண்பே. |
இதுவும் ஏனையுவமத்திற்காவதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று.
1. உவமவினையன்றே என்பதற்கு வினையுவமமன்றே என்பது கருத்து. பனைநிழல் முடிந்தவழி நெடுந்தோட்டு நிழல் தோன்றுதல் சிறுவழி முடிந்தவழிச் சென்று புகும் ஊர் தோன்றுதற்குவமையாதலின் வினையுவமம் எனப்பட்டது. 2. குடைக்கு உவமானம்--மதி. அதனை ஈண்டு உவமேயம் ஆக்கி என்றது குடைக்குவமானமாகிய மதியைப் பின் குடையாகிய உவமேயமாக்கி என்றபடி. தன்னையுங் குடையென்று தன்மேலும் பாயுமோவென்று கருதி அவ்வச்சத்தால் மதி தேயுமென்று மதியைக் குடையாகக் கூறினமையே உவமேயமாக்கியதாம். |