என்னும் பாட்டினுள் உவமையாகிய பொருளினை யானையுங் கடாமுமென இரண்டாக்கி யானைக்கே ஊர்க்குறுமாக்கள் வெண்கோடு கழாலின் நீர்த்துறை படியுமென்னும் அடைகூறி 1ஊர்க்குறுமாக்கள் போல்வாரைத் துன்னருங் 2கடாஅத்திற்குச் சொல்லாமையின் இதுவும் வேறுபடவந்த உவமைத்தோற்ற மெனப்பட்டது. (7) “முதிர்கோங்க முகையென முகஞ்செய்த குரும்பையெனப் பெயறுளி 3முகிழெனப் பெருத்தநின் னிளமுலை.” (கலி. 56) என்றவழி, முதிர்கோங்கும் முற்றிய குரும்பையும் பெரியவாகலின் அவைபோலப் பெருத்தநின் இளமுலையென்றல் ஒத்தது, பெயறுளிமுகுளஞ் சிறிதாக இவற்றோடு அதனை உடன் கூறி அப்பெயறுளி முகுளத்திற்கில்லாத பெருமைக்குணம் 4பொருட்குப் பின்னர் விதந்து கூறுதலின் அதுவும் வேறுபட வந்த உவமையாயிற்று. (8) “மக்களே போல்வர் கயவ ரவரன்ன வொப்பா ரியாங்கண்ட தில்.” (குறள். 1071) என்பது ஒவ்வாப் பொருளை ஒப்புமைகொண்டது. என்னை? மக்களைக் கயவர் ஒவ்வாரென்னுங் கருத்தினான் மக்கள்போல்வர் கயவரென்றமையின் அதுவும் வேறுபடவந்த உவமையாயிற்று. (9) “நெடுந்5 தோட் டிரும்பனை நீர்நிழல் புரையக் குறும்6 பல முரிந்த குன்றுசேர் சிறுநெறி.” யானை இனிமை செய்தற்கு ஊர்க்குறுமாக்களைச் சொல்லி அது மதம் பட்டவழி இன்னா செய்தற்கு அவர்போல்வாரை இன்னாரென விதந்து சொல்லாமையின் வேறுபடவந்த உவமமாயிற்று என்பது. ஊர்க்குறுமாக்களுக்கு வெண்கோடு கழுவுமிடத்து களிறு இனியது. அவர்போல்வாருக்கு மதம்பட்டவழி இன்னாது என்பது செய்யுட்கருத்து.
1. போல்வாரை என்ற பாடமே பொருத்தம். போல் அவரை என்ற S. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிற் பாடம் பொருத்தமில்லை. 2. கடாத்திற்கு--கடாமாகிய உவமைக்கு. 3. முகிழ்--குமிழி--முகுளம் என்பதும் குமிழிக்குப் பெயர். 4. பொருள்--உவமேயம். பின்னர்--பின். விதந்து--தெரித்து என்றது பெருத்த எனத் தெரித்துக் கூறினமையை. பெருமை. குமிழியாகிய உவமைக்கில்லாதபடியாற்றான் பின் தெரித்துக் கூறினாரென்றபடி. 5. தோடு--இதழ். 6. பல--பலவாய். |