(3) “அடிநோக்கி னாழ்கடல் வண்ணன்றன் மேனிப் படிநோக்கிற் பைங்கொன்றைத் தாரோன்--முடிநோக்கித் தேர்வளவ னாத றெளிந்தேன்றன் சென்னிமே லாரலங்க றோன்றிற்றுக் கண்டு.” என்பதனுள், ஆழ்கடல் வண்ணனையுங் கொன்றைத்தாரோனையும் உவமை 1கூறி அவற்றை மறுத்துத் தேர்வளவனெனத் தெளிந்தேனெனப் பொருளையே நாட்டுதலின் அஃது உவமம் வேறுபட வந்ததாயிற்று. (4) 2”இந்திர னென்னி னிரண்டேகண் ணேறூர்ந்த வந்தரத்தா னென்னிற் பிறையில்லை--யந்தரத்துக் கோழியா னென்னின் முகமொன்றே கோதையை யாழியா னென்றுணரற் பாற்று.” என்பதனுள், இந்திரனையும் இறையோனையும் முருகனையும் ஒப்பு மறுத்து நெடியோனை உவமங் கூறலின் ஒப்புமை மறுத்துப் பிறிது நாட்டியது. (5) 1. “சுற்றுவிற் காமனுஞ் சோழர் பெருமகனாங் கொற்றப்போர்க் கிள்ளியுங் கேழொவ்வார்--பொற்றொடீ 3 யாழியுடை யான்மகன் மாயன் சேயனே கோழி யுடையான் மகன்.” என்பதனான் உவமையும் பொருளும் முன் ஒருங்கு நிறீஇப் பின்னர் ஒவ்வாமை கூறுதலின் இதுவும் பின்னும் வேறுபட வந்ததாயிற்று. 2. “புனனாடர் கோமானும் பூந்துழாய் மாலும் வினைவகையான் வேறு படுப--புனனாட 4னேற்றெறிந்து மாற்றலர்பா லெய்தியபார் மாயவ னேற்றிரந்து கொண்டமையா னின்று.” என்பதுவும் அது. (6) 5“ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலி னீர்த்துறை படியும் பெருங்களிறு போல வினியை பெரும வெமக்கே,” (புறம். 94)
1. கூறி அவற்றை எனப் பிரிக்க. 2. கோதையாகிய இவனை இந்திரனென்னின் அவற்குக் கண் ஆயிரம்; இவற்கு இரண்டே. ஆதலால் அவனல்லன் எனப் பொருள் விரித்துரைத்துக்கொள்க. ஏறூர்ந்த அந்தரத்தான்--சிவன். கோழியான்--கோழிக்கொடியோன் = முருகன். 3. ஆழி--சக்கரம். மாயன்--கரியன். சேயன்--செந்நிறமுடையன். கோழி--உறையூர். 4. ஏற்று--எதிர்த்து. எறிந்து--கொன்று. ஏற்று--யாசித்து. 5. ஊர்க்குறுமாக்கள் என்னுஞ் செய்யுளில் அமைந்துள்ள வேறுபடவந்த உவமத் தோற்றம் என்பதன் விளக்கமாவது: |