பக்கம் எண் :

170உவமவியல்

கடையாயினார் 1கதியிற் செல்லு மதியமென்று பாட்டுடைத் தலைவன் தலையாயினார் கதியிற் செல்லுமென்றான். பொழுதெனவரைதியெனவே, நாடோறும் நாழிகை வேறுபட்டு எறித்தியென்றதனான் இவன் 2பொழுது செய்யானெனவும், புறங்கொடுத் திறத்தியெனவே, தோற்றார்போன்று ஒளிமழுங்கிச் செறிகின்றாயெ3 (னவும், விளங்கித் தோன்றவெ) ன்றதனாற் 4(தொடர்கின்ற) சுடர்போல விளங்கிப் பிறர் தோற்றோடக் காயும் இவனெனவும், மாறி வருதியெனவே, திங்கடோறும் மாறிப் பிறத்தியென்றதனான் இவன் நிலைபெற்றானெனவும், மலைமறைந் தொளித்தியெனவே, மலைசார்ந்தவழித் தோன்றாயென்றதனான் இவன் தன்னாட்டு5 மலைமீக் கூறுமெனவும், அகல் விசும்பினானுமெனவே, இவன் இவ்வுலகத்து நிலைபேறுடையனெனவும், பகல் விளங்காயெனவே, இவன் இருபொழுதும் விளங்குமெனவுங் கொள்ளப்படும். முற்பகுதியும் பிற்பகுதியும் வேறுபடுதலின் வேறுபட வந்ததாயிற்று. மற்றவையும் அன்ன.

இக்கூறிய அடையெல்லாம், வினை பயன் மெய் உருவெனக் ‘கூறிய மருங்கிற் கொள்வழிக்’ 6கொளுவுவதாகக் காட்டுவனவற்றிற்கும் இஃதொக்கும்.

(2)“கண்ண னவனிவன் மாறன் கமழ்துழாய்க்
    கண்ணி யவற்கிவற்கு வேம்புதார்--வண்ணமு
    மாய னவனிவன் சேயன் மரபொன்றே
    யாய னவனிவன் கோ.”

என்பது, பெயருந் தாரு முதலாயினபற்றி மாயனோடு உவமங் கருதி மறுத்துரைத்தவாறு. 7பெயரென்பது பொருளுணர்த்துதலின் அதனை வடிவின்பாற்படுத்துணர்க.


1. கதி--செலவு.

2. பொழுது செய்யாமை--காலங்குறித்துத் தோன்றாமை. எனவே தான் விரும்பிய காலத்துத் தோன்றுவான் என்றபடி.

3.--4. இப்பகரக் கோட்டினுள் அடைத்தவையும் வேண்டியதில்லை.

5. மலைமீக் கூறும்--மலையிலுள்ளாராலும் புகழப்படுவான் என்பது. இவன் மலைக்கண் மறையான் என்றபடி.

6. ‘கொளுவுவதாகக் காட்டுவனவற்றிற்கும்’ என்பது, ‘கொளுவுக இனிக் காட்டுவனவற்றிற்கும்’ என்று பாடமுள்ளது. அதுவே பொருத்தமாதல் காண்க.

7. பெயரும் வடிவுளடக்கப்படும் என்றபடி.