பக்கம் எண் :

178உவமவியல்

நல்லார் திருமுகத் தோற்றத் தளிபெற்ற
கல்லாரம் போன்மலருங் கண்.”

என்புழி, நீலத்தோடு கண்ணினையும் கண்ணினோடு நீலத்தினையும் ஒன்றற்கொன்று உவமையாக்கியும் பொருளாக்கியும் ஒருங்கே தடுமாறக் கூறினமையின் இதுவுந் 1தடுமாறுவம மெனப்பட்டது. பிறவும் அன்ன.

(35)

[உவமைக்குவமை இல்லையெனல்]

311.அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே.

இஃது எய்தியது மறுத்தது; என்னை? வேறு ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமித்து நிறீஇ அப்பொருளோடு பிறிதொரு பொருளை உவமித்தலும் உவமையென்று கொள்ளுவானாயினும் அது கொள்ளப்படாது பொருள் விளங்காமையினெனக் கூறி விலக்கியமையின்.

இ--ள் : அடுக்கிய தோற்றம்--உவமையும் பொருளும் நிறுத்தி அடுக்கிய தோற்றம், விடுத்தல் பண்பு--சிறப்பினவாகக் கொள்ளப்படா என்றவாறு.

2“மதியத் தன்ன வாண்முகம் போலும்
 பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை.”

என்றக்கான் மதியத்தன்ன வாண்முகத்தினைத் தாமரையென்றமையின் அவை ஒன்று ஒன்றனோடு பொருந்தாவென்பது கருத்து.

“இலங்குவளை யன்ன நலங்கே ழாம்பற்
 போதி னன்ன தாதவிழ் கைதை.”

என்றக்கால், ஒன்று ஒன்றனோடு ஒரு 3வண்ணத்ததாய் உவமைக்கேற்பினும் ஒன்றற்கொன்று உவமையாய் நின்றது. நின்றுற, 4மற்றும் அதனோடு உவமங்கொள்ளப்படாது; இது வரையறையுடைமையின் விலக்கப்பட்டது. மற்று,--


1. இதனை இதரவிதரமென்பர் வடநூலார்.

2. மதியத்தன்ன வாண்முகம் என்பது துணிக்கப்பட்டு வேறு முடிபுபெறின் உவமைக்குவமையாகுங் குற்ற மாகாது; பெறாது வருதலின் ஒன்று ஒன்றனோடு பொருந்தாது குற்றமாம் என்றபடி.

3. வண்ணம்--நிறம்.

4. மற்றும்--மற்று என இருத்தல் வேண்டும். அதனோடு--உவமைக் குவமையாய் நின்றதனோடு இவ் வாக்கியத்தில் பிழையிருத்தல் வேண்டும்.