12. சிவந்த இதழை யொத்தனவாகி. (அகம். 19) 13. மாட்சிமைப்பட்ட அழகிய மூங்கிலை வென்ற தோளையுடையாய். நீ வந்தால் நின்னிளைப்பை ஆற்றும். (கலி. 20) 14. கண்ணைப்போல (க் குவளைப் பூக்களை) மலர்ந்த சுனைகளும். 15. நறிய முல்லையின் தம்முள் ஒத்த முகையை ஒப்ப நிரைத்த. 16. முழவையொத்த பெருமையையுடைய தனது கையினாலே அவர்கள் கையினைப் பொருந்த எடுத்துக்கொண்டு. இதற்கு நச்சினார்க்கினியர,் இயல என்பதை முன்கூட்டித் தழீஇ என்பதை இங்குக் கூட்டிப் பொருள் கொள்வர். 291-ம் சூத்திரம் 1. தன் சொல்லை மெய்யென்று உணர்ந்தார் மேனியை பொன்போலப் பசப்புறச் செய்வான் ஊரன். (ஐங்குறு. 41) 2. நீலமணியின் நிறத்தை ஒத்த மலரையுடைய பொலிவான காயா. 3. ஒள்ளிய செங்காந்தட் பூவை யொக்கும் உன்னுடைய நிறம். 4.வெயிலொளியை (காயச்செய்த) ஒத்த விளங்குகின்ற மாணிக்க மணியழுத்தின. 5. கார்காலத்து விரிந்த கொன்றையின் பொன்போலும் புதிய மலர். (அகம். கடவுள்) 6. தண்டளிரை ஒப்பத் தகைமை பெற்ற மேனி. 7. துளியை இடங்கடோறும் பெய்த மழையை யொத்த கூந்தல். இனித் துளிதலைத் தலைஇய மணியே ரைம்பால் என்பதும் பாடம். இதற்கு துளிகள் தன்னிடத்துப் பெய்யப்பெற்ற நீல மணியை ஒத்த கூந்தல் எனப் பொருள்கொள்க. (அகம். 8) 8. நெருப்புப்போலக் கோபித்த வெப்பம் விளங்குகின்ற ஞாயிற்று மண்டிலம். (அகம். 31) 9. அசோகின் றளிரை ஒக்கும் அழகையுடைய நிறம். அத்தன்மையாகிய நிறம். (கலி. 15) 10. குவளையின் நறிய இதழை ஒக்கும் நீர்த்துளியைக் கொண்ட குளிர்ந்த இமை. (அகம். 19) 11. பாலுமயங்கும் மருப்பினையும் உரலையொத்த பரந்த அடியையும். (கலி. 21) |