பக்கம் எண் :

பொருளதிகாரம்191

11. ஊறுகின்ற நீர் அமிழ்தினை ஒக்கும் எயிற்றினை உடையாய்.

(கலி. 20)

12. பலர் மகிழ்ந்த மகிழ்ச்சியை யெல்லாம் என்னுள்ளத்தே பெய்துவிட்டாற்போலும்.

13. யாழோசையை ஒத்த முழங்குகின்ற ஒசை நடக்கும் மாலைக்காலம் வந்து வருத்தத்தைத் தரும்.

(கலி. 29)

14. இடிபோல ஒலிக்கும் ஊக்கத்தோடு.

(அகம். 61)

15. யாழ் என்று கருதி பெரிய கல்லையுடைய பிளப்பின் கண் அசுணப்பறவை செவியால் ஓர்க்கும்.

(அகம். 88)

16. அழித்தற்குரியாரை அழித்த இடியை மாறுபட்ட பெரிய கை.

(முருகு. 5)

17. விண்ணில் முழங்குகின்ற முழக்கை ஒப்பப் பண்கள் தன் கண்களில் உண்டாக்கப்பட்டு.

(மலைபடு. 2)

290-ம் சூத்திரம்

1. நீர் வடிகின்ற ஒளிபொருந்திய மலரை ஒப்ப.

(அகம். 11)

2. உயர்ந்த பெரிய பாறையிலே குவித்த வட்டை ஒப்ப. வட்டு--உண்டை.

(அகம். 5)

3. மூங்கிலை யொத்த பருத்த தோளிலணிந்த விளக்கம் பொருந்திய அணிகள் கழல.

(ஐங்குறு. 318)

4. உரலையொத்த பரந்த அடி. (நிலத்தே பரவும் அடி என்பர் நச்சர்)

(கலி. 21)

5. முத்தினையுடைய வெள்ளிய யானைக்கோட்டை ஒத்த முலைமேல்.

6. பாம்பின் வடிவு ஒடுங்க வளைந்த இடை.

7. நெருப்பினியல்பை யோட்டிய வெப்பமான கதிர்களையுடைய சூரியன்.

8. கண்களோடு ஒத்த கழியின் முளைத்த குவளைப்பூ.

9. கடல்போலத் தோன்றுதலையுடைய காட்டைக் கடந்தோர்.

(அகம். 1)

10. அழகிய விளக்கின் ஒழுங்குபோலத் தோன்ற.

(அகம். 11)

11. புலி என்று கருதி அஞ்சிய புள்ளி பொருந்திய முகத்தையுடைய யானை.

(அகம். 12)