பக்கம் எண் :

190உவமவியல்

5. மின்னோடு மாறுபடுகின்ற விளக்கத்தோடே முடியிலே பொலிவுபெற.

(முருகு. 85)

6. பொருகின்ற களிற்றினது எருத்தின்கண் புலி பாய்ந்தாற்போன்ற பாய்ச்சல்.

7. மானை ஒத்த நோக்கத்தினையும் மடநடையையும் உடைய ஆயத்தார்.

8. கார்காலத்து மழையின் முழக்கொலியை யொக்கும்.

(அகம். 14)

9. யாழ்போலும் சாமவேத இசையைப் பாடின நீலமணி போலும் மிடற்றினையுடைய அந்தணன்.

(அகம். கடவுள்)

10. வண்டியிற் பூட்டிய வலிய எருமைக்கடாக்களைப் போலக் கூடி.

(அகம். 30)

11. குறிய வளையலை ஒக்கும் நெகிழவேண்டிய இடத்து நெகிழ்ந்து இறுகவேண்டியவிடத்து இறுகிய வார்கட்டினையும்.

(பெரும்பாண். 13)

289-ம் சூத்திரம்

1. எழிலியாகிய வானத்தை இகழ்ந்தவனாய்க் கொடுக்கும் இடக்கவிந்த கையையும் கொடையையும் வேகமான குதிரையையுமுடைய தோன்றல். கவிகை--பொன்னுமாம்.

2. மழையை யொத்த நீண்ட கையையும் வாளையுமுடைய எவ்வீ.எவ்வி--ஒரு வள்ளல்.

3. தேவருலகத்திலுள்ள கற்பகத்தை ஒப்ப.

4. விண்ணை ஒத்த விசாலித்த புகழையும் வென்றியையு முடைய வஞ்சி.

(புறம். 11)

5. மேகத்தை ஒக்கும்படி பொருந்திய பெரிய இசையைக் கொடுத்து.

6. குபேரனை ஒக்கும் பெரிய வளவிய கொடை.

7. வீங்கிய முலை மடியையுடைய நல்ல பசுவை வென்ற கொடை.

8. விரிந்த புனலையுடைய பெரிய யாற்றை ஒப்ப எவற்றையும் வரையாது கொடுக்கும் புகழ் மிக்க தோன்றல்.

9. நெருப்புப் போன்ற வெவ்விய கதிர்கள் பசையறக் காய்தலின்.

(அகம். 1)

10. மகனுக்குத் தாயாதல் ஒப்பதென்று.

(அகம். 16)