2. மழைபோன்ற வளவிய தடக்கையையுடைய வள்ளி யோனைப் பாடி. 3. வேயையொத்த தோள் ஒருபக்கம்; வெற்பை ஒத்த புயம் ஒருபக்கம். 4. குன்றிமணியையும் இந்திரகோபத்தையும் ஒத்த உடை. 5. நீலமணியின் நிறத்தை ஒத்த கரிய மேனி. 6. மதியத்தைப்போல மலர்ந்த ஒளிபொருந்திய முகம். 7. வேயையொத்த தோள். 8. படம்பொருந்திய அரவையொத்த அல்குல். 9. இருவகைப் பற்றினையும் விட்டாரது பொருமையினை இவ்வளவென்று எண்ணாற் கூறி அறியலுறின் இவ்வுலகத்துப் பிறந்திறந்தாரை எண்ணி இத்துணையரென அறியலுற்றாற் போலும். இது பரிமேலழகர் கருத்து. இதனுள் துணை என்பதும் அற்று என்பதும் ஒப்புப்பொருளில் வந்தன என்பர் பேராசிரியர். (குறள். 22) 10. குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தாரும் தாழ்தற் கேதுவாகிய செயல்களை ஒரு குன்றியளவாயினும் செய்வாராயிற் றாழ்வர். (குறள். 965) 11. குளத்தில் மூழ்கும் மகளிரது கண்ணை ஒக்கும். (குறுந். 9) 12. நீருட் குளித்துப் பொருகின்ற கயல்போலக் கண்ணில் நீர்த்துளிகள் நிறைய. (அகம். 313) 13. கல்லை உண்கின்ற அழகிய புறவென்ன நெருங்கிய நின்னுடைய இவ்வெழில். (கலி. 56) 14. மதியத்தை ஒத்தது மறுவற்ற அழகிய முகம். 287-ம் சூத்திரம் 1. எரி செறிந்தாற்போன்ற தாமரைப்பூவையுடைய வயலின்கண். (அகம். 106) 2. குளத்தை நாடிச் சென்று முழுகிய யானையைப்போல முகம் மகிழ்ந்து அவ்விடத்து. இதற்கு யானையின் முகம் மலர்ந்தாற் போல என்று பேராசிரியர் பொருள்கொண்டனர் போலும். (அகம். 6) 3. புலியை யொப்ப ஒலி தோற்றுதலின். 4. புலிபோல ஒலி சிறந்து உலாவி. |