பக்கம் எண் :

188உவமவியல்

டுத் தோழிபடும் வருத்தத்தினால் உண்டான என்துயரைப் பொறுக்க மாட்டேனாயினேன். ஊமன்--பேசமாட்டாதவன்.

(குறுந். 224)

8. கடம்பிடத்தேயிருந்த முருகனையொத்த கூற்றுவனைப் போன்ற வேலையேந்திய பெரிய கையையுடைய புறங்கொடாத புதியோர். நெடுவேளன்ன வம்பலர் என இயைக்க.

(பெரும்பாண். 75)

9. விளங்குகின்ற பிறையையொத்த குறுக்கிட்டுக் கிடக்கின்ற வெள்ளிய பன்றிக்கோடுகள்.

284-ம் சூத்திரம்

1. எழுகின்ற முலையையொத்த செழிப்பான முகைவிண்டு அழகிய முகம்போல மலர்ந்த தெய்வத்தன்மை பொருந்திய தாமரை.

(சிறுபாண். 72--73)

285-ம் சூத்திரம்

1. உலகத்தார் அவாப்போல அகன்ற தன்னுடைய அல்குலின்மேல் சான்றோருடைய ஆராய்ச்சிபோல நுண்ணிதாகிய நுசுப்பு.

2. பெரிய கடலின் நடுவில் எட்டாந் திதிக்குரிய இளைய வெள்ளிய திங்கள் தோன்றியதைப்போல முன்பக்க மயிருக்கு அயலில் தோன்றும் சிறிய நெற்றி.

(குறுந். 129)

3. தான் (முருகன்) விரும்பலால் வண்டுகள் மொய்யாத நெருப்புப்போலும் பூவையுடைய காந்தள்.

(முரு. 43)

4. பலகாற் பழகியுங் கொல்லுகின்ற யானையை அன்னாரது நண்பினை விட்டு நாயை ஒத்தாரது நண்பினைத் தழுவிக் கொள்ளுதல்வேண்டும்.

(நாலடி. 213)

5. வள்ளத்திலுள்ள நீராற் கழுவிய முலைச்சாந்து வீதியிலே பரந்து சேறாக அதில் யானைகள் எல்லாம் அடிவழுக்கின.

6. சோற்றை வடித்தொழுக்கிய கொழுவிய கஞ்சி ஆறு போலப் பரந்தொழுக ஆனேறுகள் தம்மிற் பொரச் சேறாய்த் தேர்களோடலால் தூளியாய்ப் பொருந்தி.

(பட்டி. 44--47)

286-ம் சூத்திரம்

1. வேலையொத்த கண்ணையுடைய, மகளிர்மேற் கொண்ட வேட்கை நோயைத் தீர்ப்போம்; அவருடைய அம்புபோன்ற கண்ணொன்றினால்.