பக்கம் எண் :

பொருளதிகாரம்187

279-ம் சூத்திரம்

1. முரசொலிக்கின்ற சேனைகளையுடைய மூவரசரும் கூடி அரசின் அவையாக இருந்த தோற்றம்போலப் பாடல்பொருந்திய பயனையுடைய யாழைக்கொண்ட கூத்தர் தலைவ! பிறர் மனத்துட் கொண்டவற்றைக் குறிப்பால் அறிபவனே!

(பொருந. 547)

2. ஓவியம்போன்ற அழகினையுடைத்தாகிய இடமுடைய இல்லின்கண்.

(புறம். 251)

3. பாவையையொத்த பலராய்ந்து செய்த மாட்சிமைப் பட்ட அழகு.

(அகம். 98)

4. சிங்கத்தையொத்த வருத்துதலைக் கொண்ட வலியினையுடைய.

(பட்டி. 298)

280-ம் சூத்திரம்

1. கிளைத்த மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன.

(குறுந். 337)

2. கண்ணாடியினுள்ளே ஊதிய ஆவிபோல மெல்லமெல்ல நுணுகுதலுற்று.

(அகம். 71)

3. பாம்பு மறைத்த மதிபோல நெற்றியினொளி மறைய.

(அகம். 313)

281-ம் சூத்திரம்

1. மலையையொக்கும் இளைய களிற்றின்மேல்.

(புறம். 38)

2. செந்தாமரை மலரையொத்த அழகிய சிவந்த அடி.

(குறுந். கடவுள்)

3. நெருப்பினையொத்த (சிவந்த) சிறிய கண்ணையுடைய பன்றி.

(அகம். 84)

4. தாமரையின் இலையின்கீழ் மறைந்து நின்ற அழகிய இதழ்களையுடைய தாமரைப் பூப்போலக் கையிற்கொண்ட பச்சைக் குடைநிழலிலே தோன்றும் நின்னுடைய புதல்வனைக் கண்டு.

(கலி. 84)

5. ஆகாயத்தையொத்த அகன்ற சூழ்ச்சி.

(புறம். 2)

6. மழைக்கண் நனைந்த யானைபோல வந்துநின்றான்.

(குறுந். 161)

7. கிணற்றில் வீழ்ந்த குராற்பசு படுந் துயரத்தை இரவிலே கண்ட உயர்திணையாகிய ஊமனைப்போல என்பொருட்