பக்கம் எண் :

186உவமவியல்

14. போர்முனையின் இடத்தினைப்போலத் தூரமோ! என்றது அண்மைத் தூரத்தினை.

15. தளிர் சிவந்தாற்போலச் சிவந்த மேனி.

277-ம் சூத்திரம்

1. செவ்வானத்தையொத்த மேனி.

(அகம். கடவுள் வாழ்த்து)

2. அவ்வானத்தில் விளங்கும் பிறையையொத்த கூரிய பன்றிக் கோடுகள்.

(அகம். கடவுள் வாழ்த்து)

3. காயா மரத்தின் மெல்லிய கொம்பரிற் பொருந்தப் படர்ந்து பல துடுப்பினையொத்த பூங்கொத்துக்களைத் தாங்கிய விளங்குகின்ற குலை களையுடைய காந்தளின் அழகிய மலர்களிலுள்ள நறிய தாதுக்களை(ப் படிந்தும் எழுந்தும்) ஊதும் வண்டுகள் கையினாலெறிந்து விளையாடும் வட்டைப்போலத் தோன்றும், மேகம் படிந்து அசைகின்ற சிகரத்தையுடைய மலைக்குரியோனே. துடுப்பு--நெய்த்துடுப்பு (சுருக்குச்சுருவம்). சூடாமணி நிகண்டு பார்க்குக.

(அகம். 108)

278-ம் சூத்திரம்

1. சிங்கத்தையொத்த வருத்துதலையுடைய வலியினையுடைய.

(பட்டின. 298-ம் அடி)

2. மழைபோற் சொரிகின்ற அம்பினையும் மேகம்போலும் கரிய பரிசையையுமுடைய சோழர். மாரியம்பு--பயவுவமை. மாரி பயிரை விளைத்துப் பயன்செய்தல்போல அம்பு பகைவரை அழித்துப் பயன்செய்வது பயம்.

(அகம். 136)

3. கடலைக் கண்டாலொத்த இடமகன்ற பரப்பினையுடைய. (அகம். 76)

4. இக்கனவிய குழையையுடையாள் தெய்வ மகளோ? மயில் விசேடமோ? ஒரு மானுட மகளோ? இவளை இன்னள் என்று துணியமாட்டாது என்நெஞ்சு மயங்கும்.

(குறள். 1071)

5. நுதலையும் முகத்தையும் தோள்களையும் கண்களையும் சாயலையும் சொல்லையும் நோக்கி (உவமை கூற) நினைந்து நுதல் வியப்பையுடைத்தாய்த் தேய்ந்தது: ஆயினும் பிறையுமன்று. முகம் மறுவற்றது: ஆயினும் மதியமுமன்று. தோள் மூங்கிலின் றன்மை நெருங்கிற்று: ஆயினும் அது பிறக்கும் மலையிடமுமன்று. கண் பூவின்றன்மை நெருங்கிற்று: ஆயினும் அது பிறக்கும் சுனையிடமுமன்று. சாயலிருந்தபடி மெத்தென நடக்கும். ஆயினும் மயிலுமன்று. சொல்லுச் சொல்லத் தளரும்: ஆயினும் கிளியுமன்று.

(கலி. 55)