பக்கம் எண் :

185

உவமவியல்

உதாரணச்செய்யுளுரை

276-ம் சூத்திரம்

1. மேகம்போன்ற கொடைக்கையையுடைய தேரைக் கொண்ட வேளாயைக் காணச் செல்வாயாக.

(புறம். 133)

2. களிறாகிய இரையைத் தேரும்படி பார்வைக்கு ஒதுங்குதலோடு மறைந்து செல்லுகின்ற தன்மையினையுடைய வலிய புலியைப் போல.

(அகம். 22)

3. வடிவுவிளங்குகின்ற ஓவியத்தொழிலாற் பொலிந்த பாவை நடையைப் பயின்றாற் போன்ற நடையையுடையள். ஓவுவினை--ஓவினை என நின்றது. (அக--141) ஓவு--சித்திரம். “ஓவுறழ் நெடுஞ்சுவர்” என்பது பதிற்றுப்பத்து (68.--17) ஓ என்பதுஞ் சித்திரத்துக்குப் பெயராக வரும்போலும்.

(அகம். 142)

4. அணைத்தோள்--அணைபோன்ற தோள்.

(கலி. 86)

5. மழைக்காலத்தில் அலருகின்ற பீர்க்கின் மலர்கள் சிலவற்றைக் கைக்கொண்டுகாட்டி இப்பூவை யொத்தாள் நல்ல நுதலையுடையாள். என்றது இப்பூவினிறத்தை (பசப்பை) அடைந்தாள் என்றபடி.

(குறுந். 98)

6. பறைக்குர லெழிலி--பறைபோன்ற ஒலியை யுடைய மேகம்.

(அகம். 23)

7. தன் கடைக்கண்ணாற் கொல்லுவான்போலப் பார்த்து--கொல்லுதல்போல எனினுமாம்.

(கலி. 51)

8. ஆகாயம் உரிவதுபோல்.

(அகம். 24)

9. மணிகள் பதிக்கப்பெற்ற பாவை நடை பயின்றாற் போல.

(நற். 184)

10. வானந் தோய்ந்தால் ஒத்த விசாலமான குடிப்பிறப்பும்.

(பாயிரம்)

11. கொன்றாலொத்த துன்பங்களைச் செய்யினும்.

(குறள். 109)

12. பல சுடரையுடைய பெரிய நெருப்பு வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றைச் செய்யினும்.

(குறள். 308)

13. கற்பகம்போலக் கொடுக்கும்.