இடையறவுபட்டகாலை இடர்ப்பட்டுச் செய்தனவாதலான் அவையும் அவ்வாற்றானமையுமென்பது. இனி ஆநந்தவுவமையென்பன சில குற்றம் அகத்தியனார் செய்தாரெனக் 1கூறுபவாகலின் அவையிற்றை எவ்வாறு கோடுமெனின், அவைகள்தாம் அகத்துள்ளும் பிற சான்றோர் செய்யுளுள்ளும் வருதலிற் குற்றமாகா. அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழினும் அடங்காமை, வேறு ஆனந்தவோத் தென்பது ஒன்று செய்தாராயின், அகத்தியமுந் தொல்காப்பியமும் நூலாக வந்த சான்றோர் 2செய்யுங் குற்றம் வேறு படாவென்பது. அஃதேற் செய்யுட்கு இவை யணியென்பதூஉம் இவை குற்றமென்பதூஉம் மூன்றதிகாரத்துள்ளும் இவ்வாசிரியர் யாண்டுங் கூறாரோவெனின், செய்யுளியலில் முப்பத்துநான்குறுப்புக் கூறி அவற்றதியைபு நல்லிசைப்புலவர் செய்யுளுறுப் பெனவும், அவை தொடர்ந்த தொடர்நிலை எண்வகையாற், தொடர்நிலைச் செய்யுட்கு3வனப்பெனவும் பகுத்தோதிய இலக்கணத்திற் பிறழ்ந்தவை எல்லாங் குற்றமென்பதுங் கொள்ள வைத்தானென்பது. (37) உவமவியல் முற்றிற்று.
ஙனமே செய்யுளியல் 1-ம் சூத்திர விரிவுரையிலுங் கூறல் காண்க. “அவ்வாற்றான்... இடையறவுபட்டகாலை இடர்ப்பட்டுச் செய்தமையான் குற்றமென்று கொள்ளப்படா” என்று இவர் கூறியது, தாங்கூறியவற்றையும் அணியெனக் கொள்ளலாம் என்பதற்கு நியாயங்காட்டியதன்றி, அஃதுண்மையென்பது இவர் கருத்தன்று. அணிகொள்ளும் பிறரை மறுத்துரைத்தற்கு இங்ஙனம் பழித்துரைத்தார் என்க. 1. யாப்பருங்கல விருத்தியுடையாரும், ஆளவந்தபிள்ளையாசிரியரும் என்பர். ‘தீயி னன்ன வொண்செங் காந்தள்’ என்னும் மலைபடுகடாத்து 145-ம் அடியுரையில் நச்சினார்க்கினியரும் இதனை மறுத்தல் காண்க. 2. செய்யுங் குற்றம்--செய்யுட் குற்றமென்று பாடமுள்ளது. அதுவே பொருத்தமாதல் செய்யுளியல் 1-ம் சூத்திர விரிவுரை நோக்கியறிக. 3. வனப்பு--அம்மை முதலியனவாகச் செய்யுளியல் 1-ம் சூத்திரத்துளோதியன. |