புலம்புறு காலை யறிவொடு படாது புலம்புகொள வந்த செய்வினை யெனாஅ வின்னோ ரன்ன பலபொருட் பகுதி நன்னெறிப் புலவர் நாட்டல்வகை யுடைய.” என்றோர் சூத்திரஞ் செய்யின் அவையும் அலங்காரமெனப்படுமென்பது; அவற்றுக்கு உதாரணம், “ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல்.” (அகம். 5) என்பது மகவுநிலை. “ஓவச் செய்தியி னொன்றுநினைந் தொற்றி.” (அகம். 5) என்பது குறிப்புநிலை; என்னை? தலைமகன் 1போக்கினை உவக்குங் குறிப்பல்லாத குறிப்பாகலின் அஃதணியெனப்படும். “தும்முச் செறுப்ப வழுதாள்.” (குறள். 1318) என்பது, புலவியுளழுதமங்கலம். “பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . மோயின ளுயிர்த்த காலை.” (அகம். 5) என்பது போக்கின்கண் அழாதமங்கல நிலை. “விளிநிலை 2கொளாஅ டமியண் மென்மெல நலமிகு சேவடி நிலமிசை வடுக்கொளாஅக் குறுக வந்து கூரெயிறு தோன்ற.” (அகம். 5) என்பது, அறிவொடு படாது புலம்புகொளவந்த செய்வினை; என்னை? கேளாது கேட்டாள்போல் வந்தமையின், 3அதுவும் அலங்காரமெனப்படுமென்று சூத்திரஞ் செய்துகொள்ளல்வேண்டுஞ் செய்யுட்கு அணி வேறு கூறினென்பது. இனி, இங்ஙனங் கூறினவெல்லாங் குற்றமென்று கொள்ளப்படா; என்னை? 4வேறு காரணமுணரப்பெறாது பிறழ்ந்து
1. போக்கு--பிரிந்து போதல். உவக்குங் குறிப்பல்லாத குறிப்பு--வெறுப்பு. 2. கேளாள் எனவும் பாடம். 3. அதுவும் என்பது இன்னோரன்னவும் என்று பாட முள்ளது. அது மிகப் பொருத்தமேயாம். என்னை? முன் சொன்னவற்றையெல்லாம் தொகுத்துநிற்றலின். 4. ‘வேறு காரண முணரப்பெறாது பிறழ்ந்து இடையறவு பட்டகாலை’ என்பது ‘பொருளதிகாரமுறை பெறாது பிறழ்ந்து இடையறவுபட்டகாலை’ என்று பாடமுள்ளது. அதுவே பொருத்தமாம். என்னை? பின்னரும், ‘பகுத்தோதிய இலக்கணத்திற் பிறழ்ந்தவையெல்லாம் குற்ற’மென வருதலின். இங் |