றன்று, இன்ன சொல்லும் இன்ன பொருளுமுடையன பொன்மாலையெனவும் பூமாலையெனவும் வரையறுத்துக் 1கூறலன்மையின் அதனானும் அதனைக் குற்றமென்று இலக்கணத்தார் கூறின் நிரம்பாது. அல்லதூஉம் பொருளதிகாரத்துட் பொருட் பகுதிகளெல்லாம் செய்யுட்கு அணியாகலான்; அவை, “பாடலுட் பயின்றவை” யெனப்பட்டன என்றதனான் அவையெல்லாந் தொகுத்து அணியெனக் கூறாது, வேறு சிலவற்றை வரைந்து அணியெனக் கூறுதல் பயமில் கூற்றாமென்பது. இனி, இரண்டு பொருளெண்ணி, அவற்றை வினைப்படுக்குங்கால் ஒருங்கென்பதோர் சொற்பெய்தல் செய்யுட்கு அணியென்ப. பிறவும் இன்னோரன்ன பலவுஞ் செய்யுட்கணியாமென்பது அவர் கருத்து. ஒருங்கே யென்பதேயன்றி மூன்று தாழிசையுண் மூன்று பொருள்கூறி எனவாங்கென்பதொரு சொல்லான் முடிந்தவழியும் எனவாங்கு என்பதோர் மொழியில் எனவென்பது ஓரலங்கார மெனல்வேண்டுமாகலான் அவ்வாறு வரையறுத்துக் கூறலமையாதென்பது. பிறவும் அன்ன. இனி, 2அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது, அணியென்பவாயிற் சாத்தனையுஞ் சாத்தனாலணியப்பட்ட முடியுந்தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல அவ்வணியுஞ் செய்யுளின் வேறாகல் வேண்டுமென்பது. இனிச் செய்யுட் கணிசெய்யும் 3பொருட்படை எல்லாங் கூறாது சிலவே கூறி ஒழியின் அது குன்றக் கூறலா (663) மென்பது. 4அவை யாவையெனின், “அகமனர் கேள்வ னகற்சி தீர்த்தற்கு மகனொடு புகுந்த மகவுநிலை யெனாஅ மறுக்குங் காலை மறுத்துரை மொழியாது குறிப்புவேறு கொளீஇய குறிப்புநிலை யெனாப் புலவிக் கண்ணும் போக்கின் கண்ணு மழுதலு மழாஅதலு முயங்கலு மென்றாங் கிருவகைப் பட்ட மங்கல மெனாஅப்
1. கூறலன்மையின்--கூறல் கூடாமையின். 2. அவற்றை என்பது உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத்துள்ளும் செய்யுளியலுள்ளுங் கூறிய சிலவற்றையுஞ் சுட்டிநின்றது. 3. பொருட்படை--பொருட்டிரள். 4. அவை--அப் பொருட்படை. |