சொல்லுகின்றன சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்று அவை செய்யுட்கண்ணே அணியாமென1இக்காலத்தாசிரியர் நூல்செய்தாருமுளர். அவை ஒருதலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணங் கூறப்படா. என்னை? வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன்றாகியும் வரும், 2தாங்காட்டிய இலக்கணத்திற் சிதையாவழியுமென்பது. என்னை? “நாயகர்க்கு நாய்கள்போ னட்பிற் பிறழாது கூஉய்க் குழாஅ முடன்கொட்கு--மாய்படை பன்றி யனையர் பகைவேந்த ராங்கவர் சென்றெவன் செய்வர் செரு.” என்றவழி, நாய்போலும் நட்புடையர் படையாளரென்பது வினையுவமம்; பன்றியனையர் பகைவேந்தரென்பது நாய்க்குப் பகையாகிய பன்றிபோல 3வென்பது வேற்று வேந்தர் பகைவராதலால் அவ்வுவமை 4விலக்கரிது. அன்றாமாயினும் அஃதணியெனப்படாது; உவமைதான் உயர்ந்ததின்மையின் அது குற்றமன்றோவெனின்? “பேரூ ரட்ட கள்ளிற் 5கோரிற் கோயிற் றேருமா னின்னே.” (புறம். 300) என்பது குற்றமன்றாகலின் 6அதுவுங் குற்றமன்றெனப்படும். இனிப் பொன்மாலையும் பூமாலையும்போலப் பொலிவுசெய்தலின் 7இதுவுங் குற்றமாகாது 8மேலதே குற்றமென்பது. அற்,
தொடைகளுட்சில, உள்ளுறை, இறைச்சி, மெய்ப்பாடு முதலியவற்றை. 1. இக்காலத்தாசிரியர் என்றது தமிழில் அணிநூல்கள் செய்த தண்டி முதலிய ஆசிரியர்களைக் குறிக்கும். அணிநூல் என ஒரு நூல் இருந்ததாகவுஞ் சிலர் கருதுவர். 2. தாம் என்றது அணிநூல் செய்தோரை. 3. என்பது என்னுஞ் சொல் ஈண்டு வேண்டியதில்லை. 4. விலக்கலரிது--விலக்கக்கூடாது. அன்றாமாயினும் என்பதற்கு விலக்குதலரிதன்றா மாயினும் என்பது பொருள், விலக்கலாமாயினும் என்பது கருத்து. 5. ஓரில்--ஒரு வீட்டின்கண். கோய்--கள்முகக்கும் பாத்திரம். அது இழிவுடையதாகாதது போல இதுவு மிழிவுடைத்தாகாதென்றபடி. 6. அதுவும்--அவ்வுவமையும். 7. இது--கோய் வருஞ் செய்யுள். கோய் என்னும் உவமை உயர்ந்த பொன்மாலைபோலப் பொலிவுசெய்யாதாயினும் அதிற் சிறிது குறைந்த பூமாலைபோலப் பொலிவுசெய்யுமென்றபடி. 8. மேலது--பன்றியனையர் பகைவேந்தர் என்னுஞ் செய்யுள். |