பக்கம் எண் :

180உவமவியல்

சுண்ணத்தினை வரைந்தநிலைமையான் வந்தனவெனவே சுண்ணந்தவிர மூன்றுளவோவெனின் அதனை 1ஒருவரை விலக்க மூவரும் வந்திலரென்றாற் போலக் கொள்க.

உதாரணம்,

“கொடிகுவளை கொட்டை நுசுப்புண் கண்மேனி
 மதிபவள முத்த முகம்வாய் முறுவல்
 பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல்
 வடிவினளே வஞ்சி மகள்.”

என வரும். நிரனிறுத்தலென்னாது அமைத்தவென்றதனான் நிரனிறையன்றி அமைத்துக்கொள்வதும் உண்டு; அது,

2“களிறுங் கந்தும் போல நளிகடற்
 கூம்புங் கலனுந் தோன்றுந்
 தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே.”

எனவரும்; பிறவுமன்ன.

என்றார்க்கு, ‘நிரனிறுத்தமைத்த நிரனிறை ஏனைவரை நிலைவைத்த மூன்றலங்கடையே’ என்னாது, சுண்ணத்தினை வரைந்தோதியது என்னையெனின்? அவை மூன்றுஞ் சுண்ணம்போலச் சுண்ணஞ் செய்யப்படுதலின், அவ்வாற்றாற் சிதர்ந்து கிடப்ப உவமையுங் கூறின் அது பொருள் விளக்காதென்பது அறிவித்தற்கென்பது. என்னை? அடிமறியுள் ஓரடியுள் உவமங் கூறி ஓரடியுட் பொருள்வைத்தால் இனிது பொருள்கொள்ளாது அடிமறிக்குங்காலைப் 3பிறிது பிறிதாகலுடைத்து. இனி ஓரடியுள் உவமங் கூறிப் பின்னர் எத்துணையுஞ் சென்று பொருள் கூறி மொழி மாற்றிக்கொள்ள வைப்பின் அதுவும் உவமத்தாற் பொருள் தோன்றாது. சுண்ணத்திற்கும் அஃதொக்கும்.

இனி, 4இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையுஞ் சொல்லதிகாரத்தினுள்ளுஞ் செய்யுளியலுள்ளும்


1. மூவருள் ஒருவரும் அடங்குதல் போல என்பது கருத்து.

2. எதிர் நிரனிறை.

3. பிறிது பிறிதாகல்--உவமை வேறும் பொருள் வேறுமாகல்.

4. இவ்வோத்தினிற் கூறுகின்ற சில என்பது உவமைகளையும் வேறுபடவந்த உவமங்களையும் ஒரீஇக் கூறுவனவற்றையும் தடுமாறுவமங்களையும் நிரனிறை உவமைகளையும் குறித்து நின்றது. சொல்லதிகாரத்தில் கூறுவன சில என்றது குறிப்புப் பொருள், ஏது, பண்புத்தொகை (உருவகம்), உவமத்தொகை, பொருள்கோள் முதலியவற்றை. குறிப்புப்பொருள் அணியில் ஒட்டணியாகின்றது. செய்யுளியலுட் கூறுவன சில என்றது