312-ம் சூத்திரம் 1. கொடியும் குவளைப் பூவும் தாமரைப் பொகுட்டும் (முறையே) போலும் நுசுப்பையும் மையுண்டகண்களையும் மேனியையும், மதியும் பவளமும் முத்தும் (முறையே) போலும் முகத்தையும் வாயையும் பல்லையும். பிடியும் மானும் மயிலும் (முறையே) போலும் நடையையும் நோக்கையும் சாயலையும் உடைய வடிவையுடையவளாவள் வஞ்சியிலுள்ள (மகள்) பெண். 2. யானையுந் தூணும் போல நீர் செறிந்த கடலிலே பாய் மரமும் தோணியுந் தோன்றும். தோன்றலை மறந்தோரது துறை பொருந்திய நாட்டின்கண். தோன்றல்--பெருமை. 3. நாயகர் - தலைவர். குழாம் - கூட்டம். படை - சேனை. 4. பெரிய ஊரிலே யட்ட கள்ளை முகத்தற்கு ஒரு வீட்டிலுள்ளே கட்கோயைத் தேடுவதுபோல நின்னைத் தேடுகிறான். கோய் - கள் முகக்கும் பாத்திரம். (புறம். 300) |