பக்கம் எண் :

201

எட்டாவது: செய்யுளியல்

[செய்யுட்குறுப்பாவன இவையெனல்]

313.மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ
யாத்த சீரே யடியாப் பெனாஅ
மரபே தூக்கே தொடைவகை யெனாஅ
நோக்கே பாவே யளவிய லெனாஅத்
திணையே கைகோள் கூற்றுவகை யெனாஅக்
கேட்போர் களனே காலவகை யெனாஅப்
பயனே மெய்ப்பா டெச்சவகை யெனாஅ
முன்னம் பொருளே துறைவகை யெனாஅ
மாட்டே வண்ணமோ டியாப்பியல் வகையி
னாறு தலையிட்ட வந்நா லைந்து
மம்மை யழகு தொன்மை தோலே
விருந்தே யியைபே புலனே யிழைபெனாஅப்
பொருந்தக் கூறிய வெட்டொடுந் தொகைஇ
நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே.

என்பது சூத்திரம்.

இவ்1வோத்து என்ன 2பெயர்த்தோவெனின், செய்யுளியலென்னும் பெயர்த்து; செய்யுளிலக்கணம் உணர்த்தினமையான் அப்பெயர்த்தாயிற்று. எனவே, ஓத்து நுதலியதூஉஞ் செய்யுளிலக்கண முணர்த்துதலென்பது பெற்றாம்.

மேற்பாயிரத்துள்,

“வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி
னெழுத்துஞ் சொல்லும் பொருளும்.”

(பாயிரம்)

3ஆராய்வலென்று புகுந்தமையால் 4எழுத்தினுஞ் சொல்லினும் வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேண்டுவன 5விராய்க்கூறிப்


1. ஓத்து--இயல்.

2. பெயர்த்து--பெயரையுடையது,

3. ஆராய்வல்--ஆராய்வேன்.

4. எழுத்தினுஞ் சொல்லினும்--எழுத்ததிகாரத்துஞ் சொல்லதிகாரத்தும்.

5. விராய்--கலந்து.