பது பாடமாயின், எண்ணிய மூன்றனையுந் தொகுத்தவாறே பிறிதில்லை. கேட்போர் என்பது, இன்னார்க்குச் சொல்லுகின்றது இதுவெனத் தெரித்தல். களமென்பது முல்லை குறிஞ்சி முதலாயினவும் இரவுக் குறி பகற்குறி முதலாயினவும் உணரச்செய்தல், மற்றுத் தன்மை முன்னிலை படர்க்கையுமாம். 1காலவகையென்பது, சிறுபொழுது பெரும்பொழுதென்னுங் காலப்பகுதி முதலாயின. பயனென்பது, 2சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச்செய்தல். மெய்ப்பாடென்பது சொற் கேட்டோர்க்குப் பொருள் 3கண் கூடாதல். எச்சவகையென்பது, சொல்லப்படாத மொழிகளைக் குறித்துக்கொள்ளச் செய்தல்; அது 4கூற்றினுங் குறிப்பினும் வருதலின் ‘வகை’ என்றான். 5முன்னமென்பது, உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோரும் தத்தம் வகையான் ஒப்பச் சொல்லுதற்குக் கருத்துப்படச் செய்தல். பொருளென்பது, புலவன் தான் 6தோற்றிக்கொண்டு செய்யப்படுவதோர் பொருண்மை. துறைவகையென்பது, முதலும் கருவும் முறைபிறழ வந்தாலும் இஃது இதன்பாற்படுமென்று ஒரு துறைப்படுத்தற்கு
1. காலமென்பது முக்காலத்தும் திணை நிகழ்ச்சிக்கண்ணே பொருள் உணர்ச்சி நிகழக் கூறல் என்பர் நச்சினார்க்கினியர். 2. சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச் செய்தல்--பாட்டிற் சொல்லப்பட்ட பொருளானே பிறிதொரு பொருள் தோன்றச் செய்தல். 3. கண்கூடு--பிரத்தியக்ஷம். நேரே கண்டதுபோறல். 4. எச்சவகையை 518-ம் சூத்திர உரை நோக்கியுணர்க. 5. முன்னம் என்பது கூறுவோரையும் கூறக்கேட்டோரையும் குறிப்பான் எல்லாருங் கருதும்படி செய்தல் என்பர் நச்சினார்க்கினியர். 6. தோற்றி--உண்டாக்கி. |