அலகிட அமையாதே? 1ஞாயிறு எனக் குற்றுகரங் குறிலிணையாய் அலகுபெறுமாறெனக் குற்றங் கூறுப. 2முற்றுகரமும் தேமாவென நேரசையாயிற்றுப்போல, மின்னு என்றவழியும் வேறலகுபெற அமையுமென்பது; அற்றன்று; 3குற்றுகரத்தினைக் குற்றெழுத்தென்ப; வேறு குற்றுகரம் வேண்டாதாரும். என்றார்க்கு 4வேண்டினானையுங் குற்றங் கூறுவரவர்; என்னை? குற்றியலுகரம் அரைமாத்திரைத்தாகலின், 5ஒற்றுப் போல ஓரசையுள் ஒடுக்கி அலகிடப்படும். அற்றன்றேற் குற்றெழுத்தாக்கி அலகுவைக்கவே அமையுமென்பதாம் அவர்
1. ஞாயிறு--நேர்நிரை. இதில், ‘யிறு’ குறிலிணையாக வைக்கப்படும். என--என்னுமென்று மிருக்கலாம். 2. முற்றுகரமும் அமையுமென்பது என முடிக்க. தேமா என என்பது தேமா என்பது என்றிருத்தல்வேண்டும். 3. நேர்பு நிரைபு எனக் குற்றுகரத்தை வேறசையாக வேண்டாதாரும் குற்றுகரத்தைக் குற்றெழுத்தாக வைத்தே அசைகொள்வர். ஆதலின் இவ்வாசிரியரும் ஞாயிறு முதலியவற்றை மாத்திரம் குற்றெழுத்தாக வைத்து அசைகொண்டார். ஆகலின் யாண்டும் அவ்வாறு கோடல்வேண்டும்மென்பது நியதியன்று. ஆதலின் அற்றன்று என மேலே கூட்டுக. என்றார்க்குக் கூறுப என இயைக்க. அவர் என்றது குற்றுகரத்தைக் குற்றெழுத்தாகக் கொள்ளும் ஒரு சாராரை. 4. வேண்டினானை என்றது குற்றுகரம் வேண்டினானை என்றபடி. வேண்டினான்--குற்றுகரத்தை (நேர்பு நிரைபு என) வேறசையாக வேண்டினான்; என்றது இந்நூலாசிரியரை. 5. ஒற்றுப்போல ஓரசையுள் ஒடுக்கி அலகிடப்படும் என்றது வரகு என்புழி கு என்பதை ஒற்றாகக்கொண்டு வர என்பதை நிரையசையாகக் கோடலை. அலகு வைத்தல் என்றது கு என்பதையும் குற்றெழுத்தாகக் கொண்டு வரகு என்பதை நிரை நேர் எனக் கோடலை. குற்றுகரம் ஒற்றுந் தானுமாகி அரைமாத்திரை என்றது ஒற்றுக்குரிய அரைமாத்திரை தன்னுள் அடங்கத்தான் தனக்குரிய மாத்திரையோடு நிற்றலை. தனிமெய்யாயின் ஒடுங்கியிசைக்கும்; மெய்யின்மேல் அரைமாத்திரையான குற்றுகரமுஞ் சேர்ந்து நிற்றலின் அகன்று இசைக்கும் என்றார். ஒடுங்கியிசைத்தல் முன்னின்ற ஓரசையுள் ஒடுங்கியிசைத்தல். நாள் என்றவழி முன்னின்ற நெட்டெழுத்துள் மெய் ஒடுங்கி இசைத்தலும் நாடு என்றவழி டுகரம் ஒடுங்கியிசை யாமையும் செவி கருவியாகவுணர்ந்துகொள்க. செயற்பாலது ஓரசையாக்குதல் எனக் கண்ணழிக்க. நேர்புஅசை நிரைபுஅசைகளைத் தொல்காப்பியர் கொண்டமைக்கு இளம்பூரணர் கூறுங் காரணத்தையும் ஈண்டுக் காட்டுதும். அது வருமாறு:-- |