பக்கம் எண் :

222செய்யுளியல்

நிரையசை அடுத்து வருதலின்மையானும் அது பெறுதுமென்பது. முன்னர் நேரசை நான்கும் நிரையசை நான்குமென எண்வகையான் அசை கூறி அவற்றுப்பின் இருவகை யுகரமும் வருமெனவே, அவை குற்றுகரத்தோடு எட்டும் முற்றுகரத்தோடு எட்டுமாகப் பதினாறு உதாரணப் பகுதியவாய்ச் சென்றதேனும், அவற்றுட்1குற்றெழுத்துப் பின்வரும் உகரம் நேர்பசையாகாதென்பது,

“குறிலிணை யுகர மல்வழி யான.”

(317)

என்புழிச் சொல்லுதும்; ஒழிந்தன குற்றுகர(ம்) நேர்பசை மூன்றும் நிரையசை நான்குமாயின.

உதாரணம்: வண்டு, நாகு, காம்பு எனவும், வரகு, குரங்கு, மலாடு, மலாட்டு எனவும் இவை குற்றுகரம் அடுத்து நேர்பும் நிரைபும் வந்தவாறு.

இனி, முற்றுகரம் இரண்டசைப் பின்னும் வருங்காற் குறிலொற்றின் பின்னும், நெடிற்பின்னுமென நேரசைக்கு இரண்டல்லதாகாது. நிரையசைக்கண்ணும் குறிலிணைப்பின்னும் குறினெடிற் பின்னுமல்லதாகாது.

உதாரணம்: 2மின்னு, நாணு எனவும், உருமு, குலாவு எனவும் வரும். வாழ்வு, தாழ்வு என நெடிலொற்றின்பின்னும் முற்றுகரம் வந்ததாலெனின்,--அவை ஆகாவென்பதூஉம் இக்காட்டிய நான்குமே ஆவனவென்பதூஉம் முன்னர்,

‘நிற்ற லின்றே யீற்றடி மருங்கினும்.”

(321)

என்புழிச் சொல்லுதும்.

இனி, ஒரு சாரார் நேர்பசை, நிரைபசையென்பன வேண்டா வென்ப; என்னை? குற்றுகர முற்றுகரங்களை வேறாக்கி


நுந்தை, நேரசை யிறுதிக்கண்ணும் நிரையசை யிறுதிக்கண்ணும் அடுத்துச் சின்னுந்தை, இராநுந்தை என வரும். அப்போது. முறையே நேர்பு நிரைபு ஆகாது. எனவே குற்றுகரம் இறுதிக் கண்ணே வந்து நேர்பு நிரைபு ஆகும் என்றபடி. இதனை 9-ம் சூத்திர உரை நோக்கியறிக.

1. குற்றெழுத்துக்குப்பின் வரும் உகரம் அது என்பது போல்வது. இது முற்றுகரமாவதன்றிக் குற்றுகரமாய் நேர்பசையாகாது.

2. மின்னு--குறிலொற்றின்பின் வந்தது. நாணு--நெடிற் பின் வந்தது. உருமு--குறிலிணைப்பின் வந்தது. குலாவு--குறினெடிற்பின் வந்தது. ஒரு சாரார் என்றது சிறுகாக்கை பாடினியார் முதலானோரை. அமையாதே--அமையாதா?