பக்கம் எண் :

பொருளதிகாரம்221

[இதுவுமது]

316. இருவகை யுகரமோ டியைந்தவை வரினே
நேர்பு நிரைபு மாகு மென்ப.

இது, சொல்லாத அசைக்கூறுஞ் சொல்லுகின்றது.

இ--ள் : இருவகை யுகரமென்பன: குற்றுகர முற்றுகரங்கள்; அவற்றோடு மேற்கூறிய நேரசையும் நிரையசையும் ஒரு சொல் விழுக்காடுபட இயைந்துவரின் நிறுத்தமுறையானே நேரசையோடொன்றிவந்த குற்றுகரமும் அதனோடு ஒன்றி வந்த முற்றுகரமும் நேர்பசையெனப்படும்; நிரையசையோ டொன்றிவந்த குற்றுகரமும் அதனோடொன்றிவந்த முற்றுகரமும் நிரைபசை எனப்படும் என்றவாறு.

இயைந்தென்றான் இருவகை உகரமும் 1இரு பிளவுபடாது ஒன்றாகி வரல்வேண்டும், அங்ஙனம் அசையாங்காலென்றற்கு. இருவகை உகரமும் ஒருகாலத்து ஒன்றன்பின் வாரா, வேறு வேறு வருமென்பது. இருவகை 2உகரமும் இறுதிக்கண் நின்று அசையாக்குமென்பதென்னை பெறுமாறெனின்?--குற்றுகரம் ஈற்றுக்கணல்லது வாராமையானும்,

“நிற்ற லின்றே யீற்றடி மருங்கினும்”

(321)

என்பதனானும் பெறுதுமென்பது; அல்லதூஉம், நுந்தையென்னும் முதற்கட் குற்றுகரம் 3இறுதிக்கண் நேரசையல்லது


1. இரு பிளவுபடாது என்றது வருஞ்சொல்லோடு சேர்ந்து வேறசையாகாமல் ஒருசொல் விழுக்காடுபட நிற்றலை. உண்டுடுத்து இதில் உண்டு என்பது குற்றுகரமேனும் வருஞ்சொல்லோடு சேர்ந்து வேறசையானமையால் நேர்பன்றானமை காண்க. பிறவாறும் பிளவுபடுவன ஆகா என்க.

2. குற்றியலுகரம் மொழி ஈற்றுக்கண் வருதலானே இறுதி நின்று அசையாமென்பதும், முற்றியலுகரம் நிற்றலின்றே ஈற்றடி மருங்கினும் என்ற விதிப்படி அடியீற்றில் நில்லாதெனவே இடைக்கண் புணர்ச்சிவகையான் நிற்குமாதலின் மொழி இறுதிக்கண் நின்று அசையாமென்பதும் பெறப்படும் என்க. புணர்ச்சி வகையான் வந்ததற்கு உதாரணம், ‘நாணுத்தளை’ ‘விழவுத் தலைக் கொண்ட’ என்பன். இவற்றில் வருமுகரம் புணர்ச்சி பற்றி வந்தன. நாண் உகரம்பெற்று நாணு எனவும், விழா என்பது குறுகி உகரம்பெற்று விழவு எனவும் நின்றன. எழுத்ததிகாரம் நோக்குக.

3. இறுதிக்கண் நேரசையல்லது நிரையசையடுத்து வருதலின்மையானும் என்பதில் அல்லது என்பதை நீக்கிக்கொள்க.