“குறிலிணை குறினெடி லொற்றொடு வருதலொடு.” எனவும், வேறு நிரனிறீஇப் பொருளுரைக்க. ‘மெய்ப்பட நாடி’ என்பது பொருள்பெற ஆராய்ந்து; எனவே, இப்பெயர் ஆட்சி காரணமேயன்றிக் குணங் காரணமாகலு முடையவென்றவாறு. உயிரில்லெழுத்தல்லாதன (356) தனித்து நிற்றலின் இயலசை யென்னும் பொருள்பட நேரசையென்றாயிற்று. அவை இரண்டு நிரைதலின் இணையசையென்னும் பொருள் பட நிரையசையென்றாயிற்று; அல்லதூஉம், ‘மெய்ப்பட நாடி’ என்றதனான் அவ்வாய்பாடே அவற்றுக்குக் காரணமென்பதூஉங் கொள்க. 1உடம்பொடு புணர்த்தல் (665) என்பதனால் உதாரணமுங் கூறியவாறு. அவை நேர்நிரையெனச் சொல்லிக் கண்டு கொள்க. அ ஆ எனவும், அல் ஆல் எனவும், பல பலா எனவும், புகர் புகார் எனவும், பிறவும் இவ்வாறு வருவனவெல்லாங் கொள்க. மற்று, குறினெடிலென எழுத்தாக ஓதியதென்னை? சொல்லாயவழி அசையாகாவோவெனின்,--அவை ஒற்றொடு வருதலென்றதனானே, சொல்லாதலும் நேர்ந்தானாகவே அவை இருவாற்றானும் 2அசையாமென்பது 3சீரின்றன்மைக்கண் வந்தது. ‘உள் ளார் தோ ழி’ என நேரசை நான்கும் வந்தன. ‘வரி வரால் கலா வலின்’ என நிரையசை நான்கும் வந்தன. (3)
1. உடம்பொடு புணர்த்தல் என்பதனை உடம்படு புணர்த்தல் (உடம் படுபு உணர்த்தல்) என்று பாடமிருப்பதாக, டாக்டர் உ. வே. சாமிநாதையர் நன்னூல் சங்கர நமச்சிவாயருரைப் பதிப்புட் கூறியுள்ளார். இங்கே உடம்பொடு புணர்த்தலால் அமைந்து கிடந்ததென்றது நேரு நிரையுமென்று கூறிய அசைப் பெயர்களே அவற்றிற் குதாரணமாயமைந்து கிடக்குமாறு சொன்னமையை. 2. அசையாமென்பது என்பதில் முற்றுத்தரிப்பு இருப்பதே பொருத்தம். பின்வரு முதாரணங்கள் சீரின்கண் அசை வந்ததற்குக் காட்டியனவாதலின். 3. சீரின் றன்மைக்கண் வந்தது என்பதில் யாதோ பிழை இருத்தல்வேண்டும். அவ்வாக்கியம் உதாரணங்களை விளக்க வந்ததாகத் தோன்றுகின்றது. அசையாமென்பது வந்தது என்று முடிக்கில் உதாரணம் என்பது பின்வரல்வேண்டும். |