மற்று, மாத்திரையளவைக்கு இலக்கணங் கூறுமி னெனின்,--அதுவும் “அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி.” (323) என்புழி, வல்லோராறெனப் பாவொடு பொருந்தக் கொளக் கூறுமென்பது; அல்லதூஉம், மாத்திரையினை அளவைப்பட நிறுத்துக என்ப தோரிலக்கணமாதலின், இங்ஙனம் வரையறை யுடைத்தாக நோக்கிச் செய்யுளுறுப்பென்றானாமென்பது. மற்று, மாத்திரையினை அளவைப்பட நிறுத்தாக்காற் படுங்குற்றம் என்னையெனின்,--அற்றன்று; ‘வரகு வரகு வரகு வரகு’ என்னும் அடியினை, 1’பனாட்டுப் பனாட்டுப் பனாட்டுப் பனாட்டு’ என நிறுத்தின் அது மாத்திரைவகையாற் சிதைவுபட்டதாம். “அம்ம வாழி கேளாய் தோழீ” என்றாற் பின்னர்நின்ற இருசீரும் நெடிலாதல் இன்னாதென்றுந், தோழியெனப் பின்னர்நின்ற சீரைக் குறுக்கினவழி இன்னோசைத்தாமென்றும் அவ்வாறே செய்யுள் செய்ப. பிறவுங் கொச்சகக்கலியுள்ளும் ஒழிந்தனவற்றுள்ளும் இவ்வாறே கண்டு கொள்க. (2) [அசைவகை யிவையெனல்] 315. | குறிலே நெடிலே குறிலிணை குறினெடி லொற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரு நிரையு மென்றிசிற் பெயரே. |
இது, நிறுத்தமுறையானே அசைவகை யுணர்த்துதல் நுதலிற்று. இ--ள் : குறிலும் நெடிலுந் தனித்து வந்தும், குறில் இரண்டு இணைந்து வந்துங் குறிற்பின்னர் நெடில் இணைந்து வந்தும் அவை ஒற்றடுத்தும் முறையானே நேர்நிரையாகையானே நேரசையும் நிரையசையுமென்றாம் என்றவாறு. “குறிலே நெடிலே யொற்றொடு வருதலொடு.” எனவும்,
1. ‘பனாட்டுப் பனாட்டு.........’ என்னும் ஓசை நீண்டு காட்டலின் வழு. |