பக்கம் எண் :

பொருளதிகாரம்619

ணந் ‘தேர்தல்வேண்டாது பொருள் இனிது விளங்கல்வேண்டும்’ என்றது, 1அவிநயத்திற்கு உரியவாதல் நோக்கியென்பது. மற்றிதனை வெண்டுறைச் செய்யுட்குமுன் வைப்பினென்னெனின்,--இஃது இசைப்பாட்டாகலின் இனி வருகின்றது இசைத்தமிழாகலின் அதற்குபகாரப்பட இதனை இறுதிக்கண் வைத்தானென்பது என்றபடி.

(242)

[இவ்வோத்தின் புறனடை]

555.செய்யுண் மருங்கின் மெய்பெற நாடி
யிழைத்த விலக்கணம் பிழைத்தன போல
வருவ வுளவெனினும் வந்தவற் றியலாற்
றிரிவின்றி முடித்த றெள்ளியோர் கடனே.

இஃது, இவ்வோத்திற்கெல்லாம் புறனடை கூறுகின்றது.

இ--ள் : செய்யுளிடத்துப் பொருள்பெற ஆராய்ந்து தந்திரம் செய்யப்பட்ட இலக்கணத்தின் வழீஇயினபோன்று பின் தோன்றுவனவுளவேல் முற்கூறப்பட்ட இலக்கணத்தோடு திரியாமல் முடித்துக் கோடல் அறிவுடையோரது கடன் என்றவாறு.

அவை எண்சீர் முதலாயின வரிற் கழிநெடிலடிப்பாற் சார்த்திக் கோடலும், ஏதுநுதலிய முதுமொழியோடு, பாட்டிற்கு இயைபின்றியுந் தொடர்புபடுப்பனவும் யாப்பென்னும் உறுப்பின்பாற் கோடலும், பிறவும் ஈண்டோதாதன உளவெனின் அவையுமெல்லாஞ் செய்யுளிலக்கண முடிபாகுமென்றவாறு.

(243)

செய்யுளியல் முற்றிற்று.


அவிநயம்--பாவகம்; கூத்து.