பக்கம் எண் :

618செய்யுளியல்

இ--ள் : சேரிமொழியென்பது, 1பாடிமாற்றங்கள். அவற்றானே செவ்விதாகக் கூறி ஆராய்ந்துகாணாமைப் பொருட்டொடரானே தொடுத்துச் செய்வது புலனென்று சொல்லுவர் புலன் உணர்ந்தோர் என்றவாறு.

அவை 2விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வனவென்பது கண்டு கொள்க.

(241)

[இழைபு இதுவெனல்]

554.ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது
குறளடி முதலா வைந்தடி யொப்பித்
தோங்கிய மொழியா னாங்கன மொழுகி
னிழைபி னிலக்கண மியைந்த தாகும்

இஃது, இறுதிநின்ற இழையிலக்கணமுணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது--வல்லொற்றடுத்த வல்லெழுத்துப் பயிலாது; 3குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து--இரு சீரடி முதலாக எழுசீரடியளவும் வந்த அடி ஐந்தனையும் ஒப்பித்து: ஒப்பித்தலென்பது, பெரும்பான்மையான் நாற்சீரடி படுக்கப்பட்டென்றவாறு; ஓங்கிய மொழியான்--நெட்டெழுத்தும் அந்நெட்டெழுத்துப்போல் ஓசை எழும் மெல்லெழுத்தும் லகார ளகாரங்களும் உடைய சொல்லான்; ஆங்கனம் ஒழுகின்--இவையும்,

“சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து
 தேர்தல் வேண்டாது.”

(553)

பொருள் புலப்படச் சென்று நடப்பின்.

இழைபின் இலக்கணம் இயைந்ததாகும்--இழைபென்று சொல்லப்படும் இலக்கணத்தது என்றவாறு.

அவையாவன: கலியும் பரிபாடலும்போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தனவென்பது. இவற்றுக்குக் கார


1. பாடி எனினும் சேரி எனினுமொக்கும். மாற்றம்-மொழி.

2. விளக்கத்தார் என்பவர் கூத்தநூலாசிரியரு ளொருவர் போலும். இவர் பெயர் யாப்பருங்கல விருத்தியுள்ளும் வருகின்றது.

3. குறளடி முதலா வைந்தடி என்பதற்கு தொல்காப்பியர் எழுத்தெண்ணி வகுத்த அடிகளையே கொள்வர் இளம்பூரணர். அது பொருத்தமாதல் காண்க.