பக்கம் எண் :

பொருளதிகாரம்621

ஒன்பதாவது: மரபியல்

[மரபுபற்றி வரும் இளமைப் பெயர் இவை எனல்]

556.மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற்
பார்ப்பும் பறழுங் குட்டியுங் குருளையுங்
கன்றும் பிள்ளையு மகவு மறியுமென்
றொன்பதுங் குழவியொ டிளமைப் பெயரே.

என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின்,--மரபியலென்னும் பெயர்த்து. இதனானே ஓத்து நுதலியதூஉம் மரபு உணர்த்துதலென்பது பெற்றாம்.

மரபென்ற பொருண்மை என்னையெனின், 1கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுஞ் 2செய்யுளியலுண் மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுமன்றி, இருதிணைப் பொருட்குணனாகிய இளமையும் ஆண்மையும் பெண்மையும்பற்றிய வரலாற்றுமுறைமையும், உயர்திணை 3நான்கு சாதியும்பற்றிய மரபும், அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபும், அவைபற்றிவரும் உலகியன்மரபும், நூன்மரபுமென இவையெல்லாம் மரபெனப்படுமென்பது.

மற்றுப் பொருள்களுள் இளமைபற்றி வரும் மரபு கூறினான் மூப்புப்பற்றி வரும் மரபு கூறானோவெனின்,--அது வரையறையின்மையிற் கூறானென்பது.

மற்று, மேலை ஓத்தினோடு இவ்வோத்திடை இயைபென்னையெனின்,--முன்னர் வழக்கிலக்கணங் கூறியதன்பின் செய்யுளிலக்


1. கிளவியாக்கத்து மரபு என்று வரையறுத்தோதப்பட்டன--“வினையிற் றோன்றும் பாலறி கிளவியும். பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும், மயங்கல் கூடா தம்மர பினவே” என்னுஞ் சூத்திரத்தானும், பிறசூத்திரங்களானும் மரபு வழுவாமற் காப்பன.

2. செய்யுளியலின் மரபென்று வரையறுத்தோதப்பட்டனவற்றை “பாட்டுரை நூலே” என்பதை முதலாகவுடைய 391-ம் சூத்திரத்தானும், “மரபேதானும் நாற்சொல்” என்னும் 392-ம் சூத்திரத்தானும், அதனுரையானு மறிந்துகொள்க.

3. நான்கு சாதி--நான்கு வருணம்.