கணஞ் செய்யுளியலுட் கூறினான். அவ் 1விரண்டற்கும் பொதுவாகிய மரபு ஈண்டுக் கூறினமையின் இது செய்யுளியலோடு இயைபு உடைத்தாயிற்று. மற்று, 2வழக்கிலக்கணஞ் செய்யுட்கும் பொதுவாகலின் இங்ஙனம் இரண்3டற்கும் பொதுவாகிய மரபினையுஞ் செய்யுளியலின்முன் வைக்கவெனின்,--அவ்வாறு வழக்குஞ் செய்யுளுமென்று இரண்டுமல்லாத 4நூலிற்கும் ஈண்டு மரபு கூறினமையின் இது செய்யுளியலின்பின் வைக்கப்பட்டது. இவ்வோத்தின் முதற்சூத்திரம் என்னுதலிற்றோவெனின்,--எல்லாப் பொருளின்கண்ணும் இளமைக்குணம்பற்றி நிகழுஞ் சொல் இவையென்று வரையறுத்துக் கூறுகின்றது. இ--ள் : மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின்--விலக்கருஞ் சிறப்பிற்றாகிய மரபிலக்கணங் கூறின்; பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்றொன்பதுங் குழவியொடு இளமைப்பெயர்--குழவியோடு இவையொன்பதும் இளமைப்பெயர் என்றவாறு. மேலன எட்டுங் குழவியுமென இளமைப்பெயர் ஒன்பதாயின. குழவியோடொன்பதென்னாது, ‘ஒன்பதுங் குழவியோடு’ என மயங்கக் கூறியவதனாற் போத்தென்பதும் இளமைப்பெயரெனவும் பிறவும் வருவன உளவாயினுங் கொள்ளப்படும். இவற்றையெல்லாம் மேல் வரையறுத்து இன்ன பொருட்கு இன்ன பெயர் உரித்தென்பது 5சொல்லும்.
1. இரண்டு--வழக்கும் செய்யுளும். 2. வழக்கு--அகத்திணைவழக்குப் புறத்திணை வழக்கு முதலியன. அவை செய்யுளியற்கு முற்கூறப்பட்ட ஏழியலானும் கூறப்படுவன. 3. இரண்டற்கும்--வழக்குஞ் செய்யுளுமாகிய இரண்டற்கும். 4. நூல் என்றது--இலக்கண நூலினை. அதன் மரபென்றது அதன் மரபாகவந்த பகுப்பும் அது செய்யுமுறையு முதலியவற்றை. 5. சொல்லும்--செய்யுமென்னுமுற்று ஆசிரியன் சொல்லும் என்றபடி. |