[ஓரறிவு முதலியன இவை எனல்] | 582. | ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே யிரண்டறி வதுவே யதனொடு நாவே மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே யைந்தறி வதுவே யவற்றொடு செவியே யாறறி வதுவே யவற்றொடு மனனே நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. |
இது, மேல் அதிகாரப்பட்ட ஓரறிவுயிர் உணர்த்தும்வழி அவ்வினத்தனவெல்லாங் கூறுதல் நுதலிற்று. இ--ள் : ஒன்றறிவதென்பது, ஒன்றனையறிவது; அஃதாவது, உற்றறிவதென்பதும். இரண்டறிவதென்பது, அம்மெய்யுணர்வினோடு நாவுணர்வுடையதெனவும், மூன்1றறிவுடையது அவற்றோடு நாற்றவுணர் வுடையதெனவும், நான்கறிவுடையது அவற்றோடு கண்ணுணர் வுடையதெனவும், ஐந்தறிவுடையது அவற்றோடு செவியுணர்வுடையதெனவும், ஆறறிவுடையது அவற்றோடு மனவுணர்வுடையதெனவும், அம்முறையானே நுண்ணுணர்வுடையோர் நெறிப்படுத்தினர் என்றவாறு. இது முறையாதற்குக் காரணமென்னையெனின்,--2எண்ணுமுறையாற் கூறினாரென்பது; அல்லதூஉம், எல்லாவுயிர்க்கும் 3இம்முறையானே பிறக்கும் அவ்வவற்றுக்கோதிய அறிவுகளென்றற்கு அம்முறையாற் கூறினாரென்பது; என்னை? அது பெறுமாறெனின்,--‘நேரிதி னுணர்ந்தோர் நெறிப் படுத்தினர்’ என்பதனாற் பெறுதும். மற்று, ஒன்றுமுதல் ஐந்தீறாகிய பொறியுணர்வு மனமின்றியும் பிறப்பனபோல வேறு கூறியதென்னையெனின்,--ஓரறி
1. அறிவுடையது என்பன அறிவது என்றும் பாடம். 2. எண்ணுமுறை என்றது ஓரறிவுயிர் ஈரறிவுயிர் என எண்ணுமுறை கூறினானென்பது--கூறினமை என்றிருத்தல் வேண்டும். 3. இம்முறை என்றது பரிசம், இரசம், கந்தம், உருவம். சத்தம் என்னுமிவைகள் இம்முறையே (அஃதாவது பரிச உணர்ச்சி பிறந்தபின் இரச உணர்ச்சி பிறக்கும் ஏனையவும் அம்முறையே) பிறக்கும் என்றபடி. |