வுயிர்க்கு 1மனமின்மையின் அங்ஙனங் கூறினாரென்பது. அதற்கு உயிருண்டாயின் மனமின்றாமோவெனின்,--உயிருடையவாகிய நந்து முதலாகியவற்றுக்குச் செவிமுதலாய பொறியின்மை கண்டிலையோவென்பது. அவ்வாறே ஒழிந்தவற்றிற்கும் மனவுணர்வில்லையென்பாரும், மனமுண் டென்பாருமென இரு பகுதியர். அவையெல்லாம் வல்லார்வாய்க் கேட்டுணர்க. அல்லதூஉம், பொறியுணர்வென்ப தாமே உணரும் உணர்ச்சி; அங்ஙனம் உணர்ந்தவழிப் பின்னர் அவற்றை மனஞ்சென்று கொள்ளு மென்பதென்னையெனின்,--மனம் ஒன்றினை நினையா நிற்க மற்றொன்று கட்புலனாயக்கால் அதனைப் பொறியுணர்வு கொள்ள 2அதன்வழியே மனந்திரிந்து செல்லுமாகலின்; என்னை? மனனுணர்வு மற்றோர் பொருட்கண் நின்றகாலத்துப் பிற பொருட்கட் சென்றதெனப்படாதன்றே? பின்னர் அதனை அறிவித்தது பொறியுணர்வாகலான் அவை தம்மின் வேற்றுமையுடையன வென்பது. அல்லதூஉம், 3தேனெய்யினை நாவின்பொறி உணர்ந்தவழி இன்புற்றும், கண்ணுள் வார்த்து மெய்யுணர் வுணர்ந்தவழித் துன்புற்றும்; நறிதாயின மான்மதத்தினை மூக்குணர்வுணர்ந்தவழி இன்புற்றும், கண்ணுணர்வுணர்ந்தவழி இன்பங் கொள்ளாமையும் வருதலின் அவை பொறியுணர்வெனப்படும். மனவுணர்வும் 4ஒரு தன்மைத்தாகல் வேண்டுமாலெனின்,--ஐயுணர்வின்றிக் கனாப்போலத் தானேயுணர்வது மனவுணர்வெனப்படும். பொறியுணர்வு மனமின்றிப் பிறவாதெனின்,--5முற்பிறந்தது மனவுணர்வாமாகவே பொறியுணர் 6வென்பது ஓரறிவின்றாகியே செல்லுமென்பது. அற்றன்றியும், ஒருவனுறுப்பிரண்டு
1. ஓரறிவுயிர் முதலியவற்றிற்கும் சூக்குமமாக மனமுண்டென்பது ஆன்றோர் கருத்து. 2. அதன்வழி--அக்கட்புலன்வழி. 3. தேனெய்--தேன்குழம்பு. 4. ஒருதன்மைத்தாதல்--ஐந்தின் தன்மையாதலன்றித் தனக்கென ஒருதன்மை உடையதாகல். கனாப்போல்’ என்றது கனாவில் பொறிகளின் அறிவின்றித் தானே உணர்தல்போல என்றபடி. 5. முன்--முதலில். முன் பொறியுணர்வும் பின் மனவுணர்வும் பிறக்கும். அன்றெனின் (முன் பிறந்ததும் மன உணர்வெனின்) பொறியுணர்வென ஓருணர்ச்சி இல்லையாம் என்றபடி. ஆக செல்லும் என இயைக்க. 6. என்பது--என என்றிருப்பது நலம். |