தீண்டியவழி அவ்விரண்டும்படினும் ஒருகணத்துள் ஒருமனமே இருமனப்பட்டு அவ்வுறுப்பிரண்டற்கும் ஊற்றுணர்வுகெடாது கவர்ப்பவாங்கிக் கைக்கொண்டு மீளுமென்பது காட்டலாகாமையானும் அஃதமையாதென்பது. (27) [ஓரறிவுடையன இவை எனல்] | 583. | புல்லு மரனு மோரறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. |
இது, முறையானே ஓரறிவுடையன வுணர்த்துதல் நுதலிற்று. இ--ள் : புறக்காழனவாகிய புல்லும் அகக்காழனவாகிய மரனும் ஓரறிவுடைய; பிறவும் அக்கிளைப்பிறப்பு உள்ளன என்றவாறு. ‘கிளைப்பிறப்பு’ என்பது, கிளையும் பிறப்புமென்றவாறு. கிளையென்பன:--புறக்காழும் அகக்காழுமின்றிப் புதலுங் கொடியும் போல்வன. பிறப்பென்பன:-- மக்களானும் விலங்கானும் ஈன்ற குழவி 1ஓரறிவினவாகிய பருவமும், எஞ்ஞான்றும் ஓரறிவினவேயாகிய என்பில் புழுவுமென இவை. இவை வேறு பிறப்பெனக் கொள்க. மற்றிவற்றுக்கு அறிவில்லை பிறவெனின்,--2பயிலத் தொடுங்காற் புலருமாகலின் ஓரறிவுடையனவென வழக்குநோக்கிக் கூறினான், இது வழக்குநூலாதலின். அஃதேல், இவை உணர்ச்சியவாயின் இன்பதுன்பங் கொள்ளுமோவெனின்,--அதற்கு 3மனமின்மையின் அது கடாவன்றென்பது. 28) [ஈரறிவுடையன இவை எனல்] | 584. | நந்து முரளு மீரறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. |
இது, முறையானே ஈருணர்வுடையன வுணர்த்துதல் நுதலிற்று.
1. ஒரறிவினவாகிய பருவம்--பரிச உணர்ச்சிமாத்திரமுடைய பருவம். 2. தொட்டாற் சுருங்கி என்னுஞ் செடியாலறியலாம். 3. மனஞ் சூக்குமமாக உண்டென்பதும் இன்பதுன்பங் கொள்ளுமென்பதும் சிலர் கொள்கை. |