| 598. | மயிலு 1மெழாலும் பயிலத் தோன்றும். |
இ--ள் : போத்தென்னும் பெயர் இப்பதின்மூன்று சாதியின் ஆண்பாற்குமுரியது என்றவாறு. ‘மற்றிவையெல்லாம்’ என்றதனால், பன்றியும் ஓந்தியும் முதலாயினவுங் கொள்ளப்படும். நீர்வாழ் சாதியுள் அறுபிறப்பென்பன--சுறாவும் முதலையும் இடங்கருங் கராமும் வராலும் வாளையுமென இவை. ‘பயிலத் தோன்றும்’ என்றதனானே, நாரை முதலியனவுங் கொள்க. மற்றிவை பயிலத் தோன்றுமெனிற் சூத்திரம் வேறுசெய்ததென்னை? முதற் சூத்திரத்துள் எண்ணுக பிறவெனின்,--இவை பறவையுட் பயிலத் தோன்றுமாகலின் வேறோதினானென்க. 2“எறிபோத்து,” 3“உழுபோத்து.” “எருமைப்போத்து.” எனவும், “புலிப்போத் தன்ன புல்லணற் காளை.” (பெரும்பாண். 138) எனவும், “மரைப்போத்து.” எனவும், 4“கவைத்தலை முதுபோத்து காலி னொற்றி . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி.” (குறுந். 213) எனவும் வரும். ‘எல்லாம்’ என்றதனால், ‘பன்றிப்போத்து’ எனவும் வரும். “முதலைப் போத்து முழுமீ னாகும்.” (ஐங்குறு. 5) எனவும், “பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்து.” (அகம் 36) எனவும்,
1. எழாஅல்--வல்லூறு. “எழாலுற வீழ்ந்தென” (குறுந். 151). 2. எறிபோத்து--குத்தும்போத்து=ஆனேறு. 3. உழுபோத்து--ஆனேறு. எருமைப்போத்தையு முணர்த்தும். 4. இப்பாடம் டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பில் வேறாகக் காணப்படுகிறது. |