“வாளை வெண்போத் துணீஇய.” (அகம். 276) எனவும், நீர்வாழ் சாதியுட் சில வரும். “மயிற்போத் தூர்ந்த வயிற்படை நெடுவேள்.” எனவும், 1“போத்தொடு வழங்கா மயிலு மெழாலும்.” எனவும் வந்தவாறு. ‘பயில’ என்றதனால், “நாரை நிரைபோத் தயிரை யாரும்.” (குறுந். 166) எனவும், ஒழிந்தனவும் இவ்வாறே கண்டுகொள்க. மற்று முதலையும் இடங்கரும் கராமும் தம்மின் வேறெனப்படுமோவெனின்,-- “கராஅங் கலித்த குண்டுகண் ணகழி யிடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉங் கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சி.” (புறம். 37) என வேறெனக் கூறப்பட்டனவென்பது. இனி, 2செம்போத்தென்பதும் ஈண்டுக் கொள்ளாமோவெனின்,--அது பெண்பாற்கும் பெயராகலின் ஒருபெயரே; பண்புகொள் பெயரன் றென்பதுணர்க. (43) [இரலையும் கலையும் என்னும் பெயர்கள் இவைக்குரிய எனல்] | 599. | இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய. | (44) |
| 600. | கலையென் காட்சி யுழைக்கு முரித்தே. | (45) |
| 601. | நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும். | |
இவை மூன்று சூத்திரமும் எண்ணிய மூன்று சாதிக்கும் இரலையுங் கலையுமென்னும் ஆண்பாற்பெயர் இன்னவாறுரியவென்கின்றன. இ--ள் : இரலையும் கலையுமென்பன புல்வாய்க்குரிய; அவற்றுட் கலையென்பது உழைக்குரித்து; அக்கலையென்பது, முசு
1. போத்தொடு வழங்கா என்ற செய்யுள் எதிலுள்ள தென்பது தெரியவில்லை. ஆணொடுதிரியாத. இயைபு நோக்கித் திரிந்து. என்றும் பொருள் கொள்ளலாம். 2. செம்போத்து--சாதிப்பெயர். அது செம்பகம் என இக் காலத்து வழங்கும். |